Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநில மைய கூட்டம் 5.11.25 முடிவுகள்

 AIBDPA TN   மாநில மைய கூட்டம் 5.11.25 முடிவுகள்

தோழர்களே, 

                    மாநில மைய கூட்டம் 05.112025 அன்று ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மாநிலத் தலைவர்  தோழர். C.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன், மாநில உதவிச் செயலாளர் தோழியர்  பெர்லின், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A. ஆரோக்கிய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய துணைத் தலைவர் தோழர் எஸ். மோகன்தாஸ் கலந்துகொண்டு வழிகாட்டினார். 

1) அகில இந்திய மாநாட்டு பணிகள் சம்பந்தமாக.  

நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில்  மாநில செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் கோயம்புத்தூர் சென்று பணிகளை  பார்வையிட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. 

கமிட்டிகள் கூட்டங்கள் நடைபெற துவங்கியுள்ளன. 

இன்னும் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

2) மாநாட்டுக்கான நிதி.  

நாகர்கோவில் மற்றும் குன்னூர் மாவட்டங்கள்  இலக்கை பூர்த்தி செய்துள்ளன. வாழ்த்துக்கள்💐*.  

மற்ற மாவட்டங்கள் உடனடியாக தங்களுடைய இலக்கை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

AIBDPA-5-வது அகில இந்திய மாநாட்டிற்கு நன்கொடை  வழங்கிய மாவட்டங்கள்.

(5.11.2025 முடிய)

*இலக்கும் வரவும்(ரூ)*

 *கோவை* இலக்கு15,00,000

 *ஈரோடு* இலக்கு-4,00,000-வரவு-2,50,000

 *வேலூர்*-3,00,000-2,00,000

*சேலம்*-3,00,000-2,20,000 

*மதுரை*-2,00,000-1,60,000 

*விருதுநகர்*-1,50,000-1,00,000

 *திருச்சி*-1,50,000-50,000 

*நாகர்கோவில்*-1,50,000. 1,50,000*🌹

 *தூத்துக்குடி*-1,50,000- 60,000

*திருநெல்வேலி*1,50,000-1,00,000

 *கடலூர்*-1,00,000-60,000

 *சென்னை*-1,00,000-45,000 

*பாண்டிச்சேரி*1,00,000-50,000

 *தர்மபுரி*-1,00,000-60,000 

*குன்னூர் 1,00,000**1,00,000*🌹

 *கும்பகோணம்*-75,000-25,000

 *தஞ்சாவூர்*-50,000-10,000 

*காரைக்குடி*-50,000-NIL

நாட்கள் குறைவாக இருக்கின்றன. நிதி வசூல் மற்றும் மாநாட்டு பணிகளை  மாவட்டங்கள் துரிதப்படுத்த வேண்டும் என மையக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.

தோழமையுள்ள
R.ராஜசேகர்
மாநில செயலர்
6.11.25

Post a Comment

0 Comments