🚩 🇻🇳 AIBDPA 🇻🇳 🚩 ERODE DISTICT UNION
ஈரோடு மாவடடம் தாராபுரம் பொதுக்குழு கூட்டம்
தோழர்களே வணக்கம்🙏
பொதுக்குழுவை கூட்டி நமது AIBDPA அகில இந்திய மாநாட்டு நிதியை பூர்த்தி செய்த தாராபுரம் கிளை தோழர்களுக்கு AIBDPA ஈரோடு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர்களே !!
இன்று 16.10.2025 காலை 11.00 மணி அளவில் தாராபுரம் பொதுக்குழு கூட்டம் தோழர். KS.சுப்பிரமணியம் (SDE RTD ) கிளை துணைத் தலைவர் அவர்கள் தலைமையிலும், தோழர் M நாச்சிமுத்து கிளைச் செயலாளர் முன்னிலையில் சிறப்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மூன்று தொழிற்சங்கங்களை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். (AIBDPA, BSNLEU, TNTCWU).
தாராபுரம் பொதுக்குழுவில் நமது மாவட்ட பொறுப்புச் செயலர் தோழர் எம் நடராஜன் அவர்கள் துவக்கி வைத்து பேசும்போது அமைப்பு நிலை சம்பந்தமாகவும் அகில இந்திய மாநாடு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். அதை தொடர்ந்து தோழர் V மணியன் மாவட்டச் செயலர் நடந்து முடிந்த வேஜ் ரிவிசன் பற்றியும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமாக பேசினார்.
அடுத்து பேசிய நமது மாநில உதவித் தலைவர் தோழர். என். குப்புசாமி அவர்கள் தனது சிறப்புறையில் தற்போதைய தொழிலாளர்களின் நிலைப்பாடு சம்பந்தமாகவும், அரசின் கொள்கைகளையும் நடைபெற்ற போராட்டங்கள் பற்றியும், வருகின்ற டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்தார். அதன் அடிப்படையில் கலந்து கொண்ட தோழர்கள் மனமுவந்து நிதியை கொடுத்துள்ளனர். BSNLEU மாவட்ட தலைவர் முருகேசன் அவர்கள் வாழ்த்தி பேசினார்
பொதுக்குழுவில் தோழர் எம் நாச்சிமுத்து கிளைச் செயலாளர் உடல்நிலை கருதி தோழர் எஸ் செல்வராஜன் தாராபுரம் கிளையின் பொறுப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். BSNLEU சார்பாக இனிப்பு, காரம், டீ வழங்கப்பட்டது. இறுதியாக தோழர். குமரகுருபரன் கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
எம் நடராஜன் மாவட்ட பொறுப்புச் செயலர்.
0 Comments