Latest

10/recent/ticker-posts

சென்னை CGM மாவட்ட AIBDPA சங்க விரிவாடைந்த செயற்குழு

  சென்னை CGM மாவட்ட AIBDPA சங்க விரிவாடைந்த செயற்குழு கூட்டம்







தோழர்களே ! வணக்கம் 🌹🌹🌹.

                   இன்று 24:09:25 காலை 11:30 மணியளவில் நம் சென்னை CGM மாவட்ட AIBDPA சங்க விரிவாடைந்த செயற்குழு மாவட்ட துணை தலைவர் தோழர் T. கோதண்டம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

             வரவேற்புரையாக மாவட்ட செயலாளர் தோழர். R. சிரில்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். கூட்டத்தின் மைய கருத்து அகில இந்திய AIBDPA மாநாடு கோயம்பத்தூரில் 2025 டிசம்பர் 17,18ல் நடைபெற இருப்பதால் அது சம்பந்தமாக கோவையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. நோட்டீஸ், நன்கொடை புத்தகங்கள் வந்துள்ளது. எனவே சென்னை மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை மிகவும் தாராளமாக வழங்க வேண்டும். நமக்கு இலக்கு நிர்ணயம் செய்த தொகை குறித்த நாட்களுக்குள் கொடுத்திட வேண்டி கேட்டு கொண்டார். டெல்லி பேரணி, தொடர் NCCPA போராட்டங்கள், பேசினார்.

               சிறப்புரை மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் மாநில சங்கம் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் கலந்து கொண்ட நிகழ்ச்சி, NCCPAவின் ஐந்து கட்ட  போராட்டங்களின் தொடர்ச்சி, அ. இ. மாநாடு நன்கொடை, FCPAவின் செயல்பாடுகள் பற்றி விரிவான செய்திகள் பேசினார்கள்.

         சங்கத்தின் ஆலோசகர் மூத்த தோழர் C.K. நரசிம்மன் சங்கத்தின் செயல்பாடுகள், NCCPA, போராட்டங்கள், தமிழகத்தில் FCPA புதிதாக நிர்வாகிகள் தேர்வு, அதில் நம் மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் கன்வீனராக தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள் மற்றும் அகில இந்திய மாநட்டு நன்கொடை, சங்க அமைப்பு நிலை பேசினார். சிறப்புரை BSNLEU தமிழ் மாநில செயலாளர் தோழர் B. மாரிமுத்து, நம் AIBDPA அகில இந்திய மாநாடு வெல்லட்டும், மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் கூறினார்.

மாநில தலைவர் தோழர் மகேஸ்வரன் மாநாடு வெற்றி பெரும் கோவை சிவக்க வாழ்த்துக்கள்.சென்னை மாவட்ட செயலாளர் தோழர் K. சீனிவாசன் சங்கத்தை வாழ்த்தி பேசினார். தோழர் ஆதிவராகன், தோழர் விஜயகுமார், தோழர் தங்கவேல் கூட்டத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள்,

கூட்டம் இறுதியில் மாவட்ட பொருளாளர் தோழர் P. மகாலிங்கம் நன்றி கூறி முடித்து வைத்தார்கள்.

தோழன்மையுடன்,
R. சிரில்ராஜ்,
மாவட்ட செயலாளர், AIBDPA,CGM,O,
சென்னை 6.

Post a Comment

0 Comments