Latest

10/recent/ticker-posts

காரைக்குடி மாவட்ட செயற்குழுக்கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற காரைக்குடி மாவட்ட செயற்குழுக்கூட்டம்





           காரைக்குடி மாவட்ட செயற்குழுக்கூட்டம் மாவட்டத்தலைவர் திரு.மீ.முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் இன்று 24.09.2025 அன்று சிறப்பாக நடந்தது. மாவட்டச்செயலர் திரு.அ.ஆ.இராமன் அவர்கள்  வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. கூட்டத்தின் துவக்கத்தில்  மறைந்த தோழர்கள் திரு.பூமிநாதன், திரு.கந்தசாமி, திரு.ஆல்பர்ட் ஆகியோரின் மறைவிற்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பின்பு மாவட்டப் பொருளாளர் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின்பு உறுப்பினர்கள் கருத்துக்கள் அறியப்பட்டு, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு செயற்குழு ஒப்புதல் பெறப்பட்டது.

தீர்மானம்:

(1) அகில இந்திய மாநாட்டிற்கு காரைக்குடி கோட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான ₹ 50,000/- க்கு ஒவ்வொரு உறுப்பினரும் தலா ₹. 2000/- வழங்க ஒப்புதழ் கொடுத்துள்ளனர்.

(2) காரைக்குடி மாவட்ட மாநாட்டை நவம்பர் மாத இறுதிக்குள் எளிமையான முறையில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

(3) திரு.சின்னச்சாமிக்கு கிடைக்க வேண்டிய பதவியுயர்வு பணப்பலணை பெற மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு வாங்கிக் கொடுக்க செய்வது.(4)திரு.நீலமேகத்திற்கு வழங்கப்பட வேண்டிய  78.2% DA வாங்குவது.

Post a Comment

0 Comments