Latest

10/recent/ticker-posts

விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 5வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் & கருத்தரங்கம்.

 விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 5வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 












தோழர்கள் அனைவரும் வணக்கம்.

                    16.09.2025 ல் நமது AIBDPA விருதுநகர் மாவட்ட சங்கத்தின் ஐந்தாவது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் MRV நினைவு அரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். ஜி. செல்வராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர். சிவஞானம் அஞ்சலி உரையும் மாவட்டச் செயலர் தோழர். க.புளுகாண்டி வரவேற்பு உரையும் நிகழ்த்தினர்.

         கோவையில் 5வது அகில இந்திய மாநாடு 2025 டிசம்பர் 17 மற்றும் 18 நடைபெறக்கூடிய மாநாட்டை ஒட்டி தோழர். முத்துசாமி அவர்கள் தலைமை தாங்க தோழர். வசந்தன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

            அதன் பின்னர் மாநில செயலாளர் தோழர்.R. ராஜசேகர் வேலிடேசன் ஆப் பென்சன் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர்.P. ராமர் மற்றும் மதுரை மாவட்ட செயலர் தோழர் செல்வின் சத்யராஜ் ஆகியோர் செயற்குழு சிறக்க வாழ்த்துரை வழங்கினார்கள். நமது சங்கத்தின் கவுரவ தலைவர் தோழர் C.K.N அவர்கள் தொலைபேசி மூலம் செயற்குழு சிறக்க வாழ்த்து தெரிவித்தார். மூத்த தோழர்.சுந்தர்ராஜன் வயது 87 கவுரவிக்கபட்டார். தோழர் கே.முருகேசன் நன்றி கூறினார்.

1. அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் சார்பாளர், பார்வையாளர் கட்டணம் ரூ1500 மற்றும் போக்குவரத்து செலவுகளை தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும். பொது அரங்கில் முதல் நாள் மட்டும் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ளலாம்.

2. 10.10.2025ல் டெல்லியில் நடக்க உள்ள பேரணியில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட தோழர்கள் தங்கள் பயணத்தை உறுதி செய்துள்ளார்கள்.

தோழர்கள்              

ஜி. செல்வராஜ்

கே..முருகேசன்

எஸ். தங்கராஜ் 

ஏ.மாரியப்பா

பி.தர்மராஜ் 

தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

3. 5வது அகில இந்திய மாநாட்டிற்கு நமது மாவட்டத்திற்கு நிதி கோட்டா ரூ. 1,50,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தவணையாக செயற்குழுவில் நிதி வழங்கிய தோழர்களின்   விபரம்                       

1. ஜி.செல்வராஜ் ரூ.5000.

2.  வீ.சுப்ரமணியன் ரூ. 5000

3.தோழியர்கள் பி.புஸ்பவல்லி ரூ. 1500

4. ச.மேரிசங்கரன் ரூ.1000

5. கு. கிருஷ்ணம்மாள் குருசாமி ரூ. 1000

6. க.ஆறுமுகதாய்னி ரூ. 500 ஆகியோர் நிதி வழங்கினார்கள். 

இது போல் தோழர்கள் அனைவரும் நமது அகில இந்திய மாநாடு சிறக்க நிதி உதவி வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

தோழமையுடன் 
க.புளுகாண்டி
மாவட்ட செயலாளர் 
விருதுநகர்.

Post a Comment

0 Comments