AIBDPA TN
அகில இந்திய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின்(AIRRF) 60வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் !!!
5.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட, NCCPA வின் அங்கமாகத் திகழும், இந்திய ரயில்வே ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பான AIRRFஇன் 60வது ஆண்டு பொதுக் கூட்டம், 17.09.2025 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது!
இந்த கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர் பொது அரங்கத்திற்கு தலைமை தாங்கினார். தோழர். டாக்டர். அதர் சிங் பொதுச் செயலாளர் AIRRF அமர்வை சிறப்பாக ஏற்பாடு செய்தார். வரவேற்புக் குழு அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது, AIRRFஇன் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தோழர்கள் கே.எம்.ரெய்னா ஏ.ஐ.எஸ்.சி.சி.ஓ., தலைமை விருந்தினராக தோழர். கே. ராகவேந்திரன் பொதுச் செயலர் NCCPA, கெளரவ விருந்தினராக, தோழர் பி. மோகன் NCCPA மாநிலத் தலைவர், தோழர் ஆர். ராஜசேகர், தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் FCPA, ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தோழர். குமரேசன் மண்டலத் தலைவர் AILRSA தனது சிறப்புரையில், ஒன்றிய அரசாங்கத்தின் ஓய்வூதியதாரர் எதிர்ப்புக் கொள்கைகளின் ஆபத்துகள், ஓய்வூதிய மறுசீராய்வு விதி மற்றும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
பொதுச் செயலர், NCCPA.





0 Comments