வழிகாட்டும் சேலம் மாவட்ட திருச்செங்கோடு கிளைக்கூட்டம்
தோழர்களே,
இன்று (16.9.25) AIBDPA திருச்செங்கோடு கிளைக்கூட்டம் CoC சார்பில் தோழர். M.குமரேசன் CoC தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் தோழர் M.ராஜலிங்கம் BS AIBDPA அனைவரையும் வரவேற்றார். மாநில அமைப்புச் செயலாளர் தோழர் S.அழகிரிசாமி அவர்கள் துவக்க உரை ஆற்றினார்.
அவரது உரையில் சர்வதேசிய, தேசிய நிலைமைகளை கூறி, AIBDPA வின் கோவை ஐந்தாவது அகில இந்திய மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி, மாநாடு வெற்றி பெற தாராளமாக நிதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட பொருளாளர் தோழர் P. தங்கராஜு அவர்களும் சேலம் மாவட்ட செயற்குழு, கோவை மாநில செயற்குழு முடிவுகளை கூறினார். தோழர் V. பரந்தாமன் BS, BSNLEU அவர்கள் AIBDPA எனும் நமது அமைப்பை வலுவானதாக வளர்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். TNTCWU BS தோழர் V.குமார் அவர்கள் 19.9.2025 CGM அலுவலக தர்ணாவில் பங்கேற்க வேண்டியதன் அவசியம், சங்கத்தில் ஒப்பந்த ஊழியர்கள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார்.
மாவட்ட செயலாளர் தோழர் S. தமிழ்மணி சம்பள பேச்சுவார்த்தை, FoCPA போராட்டங்கள், பென்சன் மாற்றத்திற்கான இயக்கங்கள் ஆகியவற்றை கூறி, AIBDPA கோவை AIC நன்கொடை கோட்டா திருச்செங்கோடு கிளை ₹60000/- வசூலித்து கொடுக்க தோழர்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
முடிவாக, ஒவ்வொருவரும் AIC க்கு குறைந்த பட்சம் ₹1000/- கொடுப்பது எனவும், முன்னணி தோழர்கள் ₹2000/-மும், அதற்கு மேலும் மனமுவந்து கொடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டது.
அதன் அடிப்படையில் உடனடியாக கீழ்க்கண்ட தோழர்கள் நிதி வழங்கினர்.
1) P. தங்கராஜு ₹5000
2) S. தமிழ்மணி ₹5000
3) M. ராஜலிங்கம் ₹5000
4) S.சீனிவாசன் ₹5000
5) M. குமரேசன் ₹2000
6) K. ராமசாமி ₹2000
7) T. சுப்பிரமணியம் ₹2000
8) K. ரவி ₹1100
9) C. ராமசாமி ₹1000
10)செந்தமிழ்செல்வ ₹1000
11) K. செல்வராஜு ₹1000
12) C. சுந்தரம் ₹1000
13) முருகேசன் MPY ₹1000
14) K. கணேசன் MSU ₹1000
15) நல்லமுத்து ₹1000
என ₹34100/- வசூலானது.
தோழர்களின் ஆர்வம் நிதி கோட்டாவினை எளிதில் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
இறுதியாக, தோழர் K.செல்வராஜு நன்றி கூற கிளைக்கூட்டம் நிறைவுற்றது.
S. தமிழ்மணி
மாவட்ட செயலாளர்
சேலம்




0 Comments