Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட விரிவடைந்த கிளை நிர்வாகிகள் கூட்டம்

கோவை மாவட்ட விரிவடைந்த கிளை நிர்வாகிகள் கூட்டம்







தோழர்களே !!

   .           07.08.25. அன்று  தோழர்  சௌந்தர பாண்டியன் அவர்கள் தலைமையில்  விரிவடைந்த கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய, மாநில, மாவட்ட மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.  அஞ்சலி  நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் தோழர். சௌந்தர  பாண்டியன் அவர்கள் நடத்தி முடித்தார். 

             மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்று நடைபெற இருக்கும்  அகில இந்திய மாநாடு சம்பந்தமாகவும், நாம் எப்படி சந்திக்க வேண்டும் அதற்கு எப்படி நிதி திரட்ட வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.  மாவட்ட முழுவதும் இருந்து100%கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள். மாநில பொருளாளர் இளங்கோ அவர்கள் மற்றும்  தோழர் வெங்கட்ராமன் AIOS வாழ்த்துரை வழங்கினார்.  தொடர்ந்து மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர் அவர்கள் சுருக்கமாக தெளிவாகும் இன்றைய நமது நிலை பற்றியும், நடைபெற இருக்கும் அகில இந்திய மாநாட்டு பணிகள் பற்றிய சுருக்கமாகவும் தெளிவாகும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.  பொருளாளர் மற்றும் மாநில செயலாளர் ஆகியோர் கதர் ஆடை அணிவித்து  கௌரவிக்கப்பட்டனர்.  கிளைகளிலிருந்து 14  கிளை நிர்வாகிகள் விவாதத்தில்  பங்கெடுத்தனர். இறுதியாக தோழர். பிரசன்னா ACS  நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். 

   இக்கூட்டத்திற்கு பிறகு அகில இந்திய மாநாட்டிற்கு வரக்கூடிய 900  சார்பாளர்களுக்கு தங்கும் இடவசதி  பார்க்கப்பட்டுள்ளது. தோழர்கள்  மாநிலச் செயலாளர் R.ராஜசேகர், மாநில பொருளாளர் A.இளங்கோ, மாநில உதவித்தலைவர் தோழர் நிசார் அஹமது சென்ட்ரல் கிளைச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் மற்றும் கிளை பொருளாளர் தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்களுக்கு வாழ்த்துக்கள். 

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments