AIBDPA TN
Forum of Civil Pensioners Associations முடிவுகள் அமலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
Validation of Pension Rules கொடுங்கோல் சட்டப்பிரிவுகளை எதிர்த்து சட்டப் போராட்டம் மற்றும் களப்போராட்டம் என தீர்வுக்கான இரு வழிகளையும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பான Forum of Civil Pensioners Associations அனைத்திந்திய அளவில் முடிவெடுத்திருப்பதை நாம் அறிவோம்.
.. நடைபெறவுள்ள ஐந்து கட்டப் போராட்டங்களை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை Flower Bazar BSNLEU சங்க அலுவலகத்தில் 15.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு NCCPA மாநிலத் தலைவர் தோழர் P. மோகன் தலைமை வகித்தார். NCCPA மாநில கன்வீனரும், தற்போதைய போராட்டக் குழுவின் கன்வீனருமான தோழர் C.K.நரசிம்மன் தனது வரவேற்புரையுடன், கூட்டத்தின் நோக்கத்தினையும் விளக்கி பேசினார்.
பின்னர் பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தோழர்கள் K. கோவிந்தராஜன், AGS, AIBDPA, A. முருகேசன், பொதுச்செயலர், DRPU, R. ராஜசேகர், மாநிலச் செயலர், AIBDPA, தமிழ்நாடு, S. மோகன், கன்வீனர், AIAAPA, தமிழ்நாடு & புதுச்சேரி, S.சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், TNITPA, D. பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர், AIFPA, சென்னை, S.சுந்தரகிருஷ்ணன், மாநிலச்செயலர், AIBSNLPWA, தமிழ்நாடு, C. ஒளி, மாநிலச் செயலர், AIBSNLPWA, சென்னை தொலைபேசி, M.பெருமாள், துணைத்தலைவர், AIRRF, மைதீன் பிள்ளை, உதவி மாநிலச் செயலர், SNPWA, J. விஜயகுமார், பொதுச்செயலர், TPPO, R. சிரில்ராஜ், CGM office, A.M.சேகர், சென்னை மாவட்டச் செயலர், AIPRPA கூட்டத்தில் கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில் தோழர்கள் C. சேகர், அனைத்திந்திய பொருளாளர், AIPRPA, T. மணிவண்ணன், சென்னை மாவட்டத் தலைவர், V. குப்பன், தலைவர், AIBDPA, சென்னை தொலைபேசி மற்றும் சங்கங்களின் முன்னணி வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
கூட்ட முடிவுகள் !
சென்னையில் 25.7.2025 மனிதச்சங்கிலி இயக்கத்திற்காக ஆலோசிக்கப்பட்ட இடங்களில் ஒன்றில் மனிதச் சங்கிலி இயக்கத்தை மாலை 5 மணியளவில் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி கோருவது.
பெரும் எண்ணிக்கையில் ஓய்வூதியர்களை மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு திரட்டுவது, மத்திய- மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது ! Forum சார்பில் ஒரு பேனர் மற்றும் அந்தந்த சங்கங்கள் அவரவர் கொடியினை எடுத்து வருவது.
மாநில அளவில் நடைபெறும் தொடர் இயக்கச் செலவுகளுக்காக ஒவ்வொரு அமைப்பும் முதல் தவணையாக ரூபாய் 1000/-ஐ நிதி மேலாண்மை பொறுப்பாளர் தோழர் N. பஞ்சாட்சரம், மாநிலச் செயலர், AIBDPA, சென்னை தொலைபேசி அவர்களின் WhatsApp எண்ணான 94446 76677க்கு Gpay மூலம் உடனடியாக அனுப்பி வைப்பது !
அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கி அனைத்து ஓய்வூதியர் சங்கங்களையும் உள்ளடக்கி ஐந்து கட்டப் போராட்டங்களும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, AIBDPA சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் N. பஞ்சாட்சரம் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவுற்றது.
கூட்டம் நடத்துவதற்கு சங்க அலுவலக இடத்தை வழங்கிய BSNL Employees Union மாநிலச் செயலருக்கும், AIBDPA சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்!
ஒற்றுமையாக களம் காண்போம் !
Validation சட்டப்பிரிவை தகர்த்தெறிவோம் !
மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில்
மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் செயலர் தோழர் M. நாராயணன் ஏற்றுக் கொண்டு, இன்று (16.7.2025) பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்றார்.
Chief PMG அலுவலகம், சித்ரா சாலையிலிருந்து...., மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடற்கரை என நாம் முன்மொழிந்த இடங்களை காவல்துறை ஒவ்வொன்றாக நிராகரித்தது.
கடும் போராட்டத்திற்குப் பிறகு, எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரில்
25.7.2025 மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மனிதச் சங்கிலி இயக்கம் நடத்திட காவல் துறை அனுமதியளித்துள்ளது.
இந்த அனுமதியை பெறுவதற்காக அரை நாள் கடுமையாக போராடிய தோழர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் !!
ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியளித்த எண்ணிக்கையில் ஓய்வூதியர்களை போராட்டத்திற்கு திரட்டிட முழு சக்தியையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கன்வீனர்
கூட்டுப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு
மாநில செயலர்
AIBDPA TN
16.7.25
0 Comments