Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்காக e-mail பிரச்சாரம் மற்றும் CCA அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம்

 AIBDPA TN - தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்காக e-mail  பிரச்சாரம் மற்றும் CCA அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம்

 19.6.2025 மாநில செயற்குழு கூட்ட முடிவுகள்





தோழர்களே,  

            CCA அலுவலகத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது மட்டுமல்ல  தீர்க்கப்படும் பிரச்சினைகளும் காலதாமதமாக தீர்க்கப்படுகின்றன என்பதனை விவாதித்து மாநில செயற்குழு கூட்டம் CCA அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளது. 

அதன் அடிப்படையில் பத்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து CCA  நிர்வாகத்திற்கு மாநில சங்கம் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 

1) CCA அலுவலகத்தை கோவை,  மதுரை   திருச்சி பகுதிகளுக்கு பிரிப்பது. 

2) போன் மெக்கானிக் தோழர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள LPD  Increment அநீதியை களைவது, 

3)குடும்ப ஓய்வூதியம்  மாற்றம் பிரச்சனையில் தொடர்ந்து நிலவும் காலதாமதம். 

4) பெயர், பிறந்த தேதி மாற்றங்கள், வங்கி கணக்கு மாற்றம் இவற்றில் ஏற்படும் காலதாமதம், 

5) குடும்ப ஓய்வூதியம் மாற்றல் கடிதங்கள் ஓய்வூதியர்களுக்கு சென்றடைவதில்லை. 

6) ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் பொழுது அதற்கான விவரங்களும், வருமானவரி பிடிப்பதற்கான விவரங்களும் கொடுக்கப் படுவதில்லை. 

7) வங்கி, தபால் பகுதியிலிருந்து சம்பனுக்கு மாறியவர்களுக்கு வாழ்வு சான்றிதழ் கொடுக்கும் போது data mis-matchக்கு ஒரு முறை விதி விலக்கு அளிக்க கோரி 

8) ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸப் எண்கள்.

9) ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை   

10) Dy.CCA பதவியை நிரப்புவது 

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து E-mail பிரச்சாரம் மற்றும் 

சென்னை எத்திராஜ் சாலை CCA அலுவலகத்தின் முன்பாக எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றை வலியுறுத்தி  மாநிலச் சங்கம் நிர்வாகத்துக்கு கடிதமாக கொடுத்திருக்கிறது. 

இதனடிப்படையில் நாம் நம்முடைய ஊழியர் மத்தியில் நம்முடைய கோரிக்கை பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இ-மெயில் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கான தேதியினை மாநிலச் சங்கம் விரைவில் அறிவிக்கும். 

இந்த போராட்டத்தை ஒரு வலுவான சக்திமிக்க இயக்கமாக நடத்துவோம். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு  தீர்வு காண்போம். 

தோழமை வாழ்த்துக்களுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
7.7.25

Post a Comment

0 Comments