AIBDPA TN ஜூலை 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்
வரலாறு காணாத மகத்தான வெற்றி
தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்துப் பகுதியினரும் இணைந்து நடத்திய நாடு தழுவிய போராட்டம் - 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் - உத்வேகத்தோடு பங்கெடுத்த போராட்டம்*
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பந்த், சாலை - ரயில் மறியல் போன்ற நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்று உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மணிப்பூர் உள்ளிட்ட பதட்டமான மாநிலங்களில் கூட வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
மறியல், கைது, ஆர்ப்பாட்டம், தர்ணா அனைத்து வடிவங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற எழுச்சிமிக்க இயக்கம் இது.
வங்கி, இன்சூரன்ஸ், தபால், IncomeTax , மத்திய அரசு ஊழியர்கள், சுரங்க தொழிலாளர்கள், BSNL ஊழியர்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்றுள்ளனர்.
சுகி, சொமேட்டோ, ஊபர் ஓலா போன்ற நெகிழி சார் ஊழியர்கள் உள்பட அனைவரும் பங்கேற்ற பொது வேலை நிறுத்தம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் AIBDPA மற்றும் NCCPA அறைகூவலுக்கிணங்க ஓய்வூதியர்கள் பல்வேறு வடிவங்களில் தங்களை இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் AIBDPA மற்றும் NCCPA தோழர்கள் மறியல் கைது ஆர்ப்பாட்டம் என அனைத்து வடிவங்களிலும் முழுமையாக பங்கேற்றுள்ளனர்.
இயக்கங்களில் பங்கேற்ற நமது AIBDPA தோழர்களை தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கும் வகையில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கும்.
இது முடிவல்ல.
இது துவக்கம்.
தொடர் போராட்டங்களின் முன்னுதாரணமாக ஜூலை 9 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
ஓய்வூதியத் திட்டத்தை மறுக்கின்ற, ஓய்வூதிய மறுபரிசீலனை மசோதாவை வாபஸ் வாங்கும் வரை, BSNL-DOT ஓய்வூதியர்களுக்கு கெளரவமான ஓய்வூதிய மாற்றம் பெறும் வரை, சிறந்த மருத்துவ வசதி கொண்ட மெடிக்கல் திட்டத்தை உருவாக்கும் வரையில்
நம்முடைய போராட்டங்கள் தொடரும்.
தொடரும்
தொடரும்
மாநிலச் செயலாளர்
10.7.25
AIBDPA Tamil Nadu All India General Strike – July 9-2025.A Historic and Unprecedented Victory.
On July 9, workers, farmers, agricultural labourers, and people from all walks of life united in a powerful, nationwide strike.
Over 25 crore workers participated with great enthusiasm, making this one of the largest collective struggles in recent times.
Bandhs, road and rail blockades were effectively carried out across many states, including Tamil Nadu. Even in conflict-prone regions like Jammu & Kashmir and Manipur, the strike witnessed active participation.
Protests took various forms—picketing, mass arrests, demonstrations, and dharnas—reflecting the people's rising anger against the corporate-friendly and anti-people policies of the central government.
Employees from all sectors—Banks, Insurance, Postal, Income Tax, Central Government Departments, Mines, BSNL—joined the strike in large numbers. Workers from the unorganised sector, including gig workers from platforms like Swiggy, Zomato, Uber, and Ola, also stood in solidarity.
Pensioners, too, responded to the call of AIBDPA and NCCPA, actively participating across the country in various forms of protest. In Tamil Nadu, our AIBDPA and NCCPA comrades played a commendable role in picketing, arrest and demonstrations.
On behalf of the Tamilnadu AIBDPA, we congratulate and deeply appreciate all our AIBDPA comrades for their unwavering participation and spirit.
These protests are a resounding warning to the government.
This is not the end — it is only the beginning.
The July 9th General Strike marks a turning point, laying the foundation for continued and intensified struggles.
Our movement will continue until:
The Pension Revalidation Bill is completely withdrawn
BSNL-DOT pensioners receive a fair and just pension revision
A comprehensive and improved medical scheme is implemented
We shall continue.
We must continue.
We will win.
R. Rajasekar
CS AIBDPA TN
10.7.25
0 Comments