சங்ககிரி கிளைச் செயலாளர் தோழர் A. கந்தசாமி மறைவிற்கு அஞ்சலி
அதிர்ச்சி தகவல் மிகப்பெரும் இழப்பு
AIBDPA சங்ககிரி கிளைச் செயலாளர் அருமைத் தோழர் A. கந்தசாமி (டெலிபோன் கண்ணன்) அவர்கள் நேற்றிரவு (7.7.2025) 10 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
.. VRS2019 ல் பணி ஓய்வு பெற்ற பின், AIBDPA அமைப்பில் துடிப்புடன் செயல்பட்ட தோழர். மெய்யனூர் கிளை தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கச் சொல்லி, சொந்த ஊர் அருகிலுள்ள சங்ககிரி கிளையை உருவாக்கி அதன் கிளைச் செயலராக திறம்பட பணியாற்றிய செயல் வீரர் தோழர் கந்தசாமி அவர்கள்.
அனைத்து இயக்கத்திலும் முன்னணியில் இருந்து அற்புதமாக செயல்பட்டவர்.
அவரது இழப்பு நமது இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் தோழரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் AIBDPA மாநில மாவட்ட சங்கங்களின் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று (8.7.2025) மதியம் 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
இடம் - மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து சேலம் செல்லும் மெயின் ரோட்டில் முனியப்பன் கோவில் அருகில் வீடு உள்ளது
0 Comments