AIBDPA TN
மாநில செயற்குழு கூட்டமும், ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டமும்.
கோயம்புத்தூர் 16-8-25 சனிக்கிழமை
தோழர்களே,
நமது சங்கத்தின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு கோவை மாநகரில் டிசம்பர் 17, 18 தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அதனுடைய வரவேற்புக் குழு கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது.
ஆகவே மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டமும் பின்னர் அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமும் கோவையில் 16-8-25 சனிக் கிழமை அன்று நடைபெறும். கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி அன்று மாலை வரை நடைபெறும்.
ஆகவே தோழர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். தொடர் விடுமுறைகள் இருப்பதால் பயணத்திற்கான டிக்கெட்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கலாம்.
இந்த கூட்டத்தில் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K. G. ஜெயராஜ் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். நமது மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
31.7.25
0 Comments