AIBDPA TN
பென்ஷன் மறு சீரமைப்புக்கு எதிரான மனித சங்கிலி இயக்கம் 25.7.25.
சிவில் பென்ஷனர்ஸ் அசோஷியேஷன்ஸ் ஃபோரம் சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற நாடு தழுவிய மனித சங்கிலி மகத்தான வெற்றி.
தோழர்களே,
25.07.2025 அன்று நடைபெற்ற மனித சங்கிலி இயக்கம் இந்தியா முழுவதும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று இருக்கிறது. ஓய்வூதியர்கள் நாடு முழுவதும் வெகுண்டெழுந்து ஓய்வூதியத்தை நிராகரிக்கின்ற இந்த கொடுமையான சட்டத்திற்கு எதிராக தங்களுடைய கோபாவேசத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்திலும் FCPA சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட மையங்களில் FCPA, (NCCPA & AIBDPA) சார்பாக இந்த இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மனிதசங்கிலி இயக்கத்தில் 2500 பேர் கலந்து கொண்டு அதை மனித சுவராக நடத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல நூற்றுக் கணக்கில் தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றுள்ளனர்.
இது அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி.
ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் அரசு கை வைத்தால் பொங்கி எழுவார்கள் என்பதனை நாம் உணர்த்தி இருக்ககின்றோம். அடுத்து வரக்கூடிய இயக்கங்களை வெற்றிகரமாக நடத்துவோம்.
அரசாங்கத்தின் ஓய்வூதியத்தை முடக்கும் திட்டத்தை கைவிடும் வரை நம்முடைய போராட்டம் தொடரும்....! தொடரும்.....!
இவ்வியக்கத்தை வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட நமது சங்க நிர்வாகிகள் அத்துணை பேருக்கும் மாநிலச் சங்கம் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மாநிலச் செயலாளர்
26.7.25
0 Comments