Latest

10/recent/ticker-posts

AIBDPA TN தோழர்களின் தகவலுக்காக !!

  AIBDPA TN  தோழர்களின் தகவலுக்காக !!


            நமது இயக்கத்தின் மூத்த தலைவரும், மத்திய சங்கத்தின் துணைத் தலைவரும், NCCPA துணைப் பொதுச் செயலாளருமான தோழர் S. மோகன்தாஸ் அவர்கள் உடல்நிலை சுகமின்றி திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை நடைபெற்று தோழர் தற்போது சுகமாக இருக்கிறார்.  சிகிச்சை முடிந்து இன்று நலமாக வீட்டுக்குச் செல்கிறார். 

தோழரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் உள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட சங்க தோழர்கள் இப்பிரச்சனையில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். மாநில சங்கமும் உடன் இருந்தது. 

       தேவையான அத்தனை உதவிகளையும் திருநெல்வேலி தோழர்கள் இடைவிடாது செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

அவர் நலம் பெற்று மீண்டும் புத்துணர்வோடு  நம்மோடு செயல்பட நமது வாழ்த்துக்கள். 

தோழமையுடன் 
ஆர் ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
12.5.25

Post a Comment

0 Comments