Latest

10/recent/ticker-posts

AIBDPA TN ஓய்வூதியர் முழக்கம் வினியோகம்

 AIBDPA TN ஓய்வூதியர் முழக்கம் வினியோகம்* 


தோழர்களே,  ஓய்வூதியர் முழக்கம் முதல் இதழ் 3500 பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர்,  திருச்சி,  கடலூர்,  பாண்டி,  சென்னை,  காரைக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கூட்டத்திலேயே தரப்பட்டுள்ளது. 

மீதமுள்ள மாவட்டங்களுக்கு

கோயம்புத்தூர் 700,  

ஈரோடு 400,  

சேலம் 250,  

மதுரை 180,

விருதுநகர் 180, 

நாகர்கோயில் 150, 

திருநெல்வேலி 140,  

தூத்துக்குடி 140,

தர்மபுரி 100, 

கும்பகோணம் 70, 

குன்னூர் 60, 

தஞ்சை 30

மாவட்டச் செயலர் விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இத்துடன் சந்தா படிவமும் இணைக்கப்பட்டுள்ளது. அதனை தோழர்கள் தேவையான அளவுக்கு நகல் எடுத்துக்  பயன்படுத்திக் கொள்ளவும். பத்திரிக்கை விநியோகம் 19.3.25 அன்று அஞ்சலகம் பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். 

தோழர்கள் பத்திரிக்கை விநியோகிக்கும் பொழுது ஐந்து ஆண்டு சந்தாவையும் உடன் வசூலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

விரைவில் அதிக அளவில் சந்தா சேர்ப்போம். 


*🇻🇳🇻🇳 மாவட்டங்களில் வெளியீட்டு விழா*

 

பத்திரிக்கை பார்சல் கிடைத்தவுடன் மாவட்டங்களில் அதிக அளவில் தோழர்களை வரவழைத்து மாவட்டங்கள் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும். பத்திரிக்கை செய்தியை ஓய்வூதியர் மத்தியில் அதிகமாக கொண்டு செல்வது இந்த நிகழ்ச்சிகள் உதவும்.

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
19.3.25

Post a Comment

0 Comments