Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 14/25...dt.18.3.25

  AIBDPA TN சுற்றறிக்கை எண் 14/25...dt.18.3.25

ஓய்வூதியர் முழக்கம் வெளியீட்டு விழா 18.3.25

நீண்ட நாள் எதிர்பார்ப்பு சாத்தியமான நாள்











தோழர்களே,  

             நமது மாநிலச் சங்கத்தின் சங்கப் பத்திரிக்கையான ஓய்வூதியர் முழக்கம் வெளியீட்டு விழா 18.03.2025 இன்று காலை கிரீம்ஸ் சாலையில் உள்ள BSNLEU அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் தோழர். சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார். தோழியர் பெர்லின் கனகராஜ் ACS வரவேற்புரையாற்ற தோழர் R.ராஜசேகர் மாநிலச் செயலாளர் அறிமுக உரையாற்றினார். 

       சங்கப் பத்திரிக்கையின்  அவசியம்  நமது பத்திரிக்கை கொண்டு செல்ல வேண்டிய தேவை, மாநாட்டு முடிவை மூன்று மாத காலத்திற்குள் அமலாக்கிய விதம் ஆகியவற்றை விவரித்தார். 

பத்திரிக்கையின் முதல் பிரதியை மாநில ஆலோசகர் தோழர் C.K.நரசிம்மன் வெளியிட BSNLEU சங்கத்தின் அகிலஇந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் S.செல்லப்பா பலத்த கரகோஷங்களுக்கு இடையே பெற்றுக்கொண்டார். தோழர் C.K.நரசிம்மன் அவர்களும் தோழர் S.செல்லப்பா அவர்களும் சிறப்புரை யாற்றினார்கள். 

.                     இந்நிகழ்ச்சியை வாழ்த்தி தோழர். V.வெங்கட்ராமன் OS CHQ,  தோழர். கே.கோவிந்தராஜ் AGS CHQ, தோழர். பி. மாணிக்க மூர்த்தி  முன்னாள் ,V.P, மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்  V.ராமகிருஷ்ணன் தோழர் M.மேகநாதன்,   சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் பஞ்சாட்சரம் BSNLEU CHTD மாநிலச் செயலாளர் தோழர் M.ஸ்ரீதர், தோழர் K.சீனிவாசன்  உதவி மாநில செயலாளர் BSNLEU  மாவட்ட செயலாளர்கள் தோழர் P.முருகன் தோழர் I.M.மதியழகன் தோழர், R.சிரில்ராஜ், தோழர். K.ஜார்ஜ் மற்றும் CGM அலுவலக உறுப்பினர் தோழர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தோழர் S.செல்லப்பா தன்னுடைய  ஓய்வூதியர் முழக்கத்திற்கான 5 ஆண்டு சந்தாவினை ரூ.500/- செலுத்தியது முன் மாதிரியாக விளங்கியது.  

அதேபோல் 2 தோழர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கை நடைபெற்றது

வேலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் தோழர் P.முருகன் ஓய்வூதியர் முழக்கம் சந்தா 19 ம்  ஆண்டு நன்கொடை 100 உறுப்பினர்களுக்கும் வழங்கியது சிறப்பு. 

*மூன்றாம் கரமாய் ஓய்வூதியம் முழக்கம்* என்ற தோழர் P.சரவணன் கவிதை பாராட்டப்பட்டது. 

நம்முடைய சங்க பத்திரிக்கை வெளியீட்டு விழாவிற்கு மத்திய சங்கத்தின் ஆலோசகர் தோழர் VAN நம்பூதிரி அவர்களும், பொதுச்செயலாளர் K.G.ஜெயராஜ் அவர்களும் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. 

திருச்சி,  நாகர்கோவில், கடலூர்,   பாண்டிச்சேரி, வேலூர்   திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து தோழர்கள் கணிசமாக கலந்து கொண்டார்கள். 60க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வந்து சிறப்பாக இருந்தது. 

மாநிலச் சங்க துணை பொருளாளர் தோழர் P.சரவணன் நன்றி கூற நிகழ்ச்சி முடிவடைந்தது. சங்க பத்திரிக்கைக்காக சந்தா அதிகம் சேர்க்க வேண்டும் என்கின்ற முனைப்போடு தோழர்கள் கலைந்து சென்றிருப்பது பாராட்டுக்குரியது.  

தோழமையுடன்  
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
18.3.25

Post a Comment

0 Comments