Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை 18/24..... dt.25-09-2024

 AIBDPA TN  சுற்றறிக்கை 18/24..... dt.25-09-2024

24-09-2024 அன்று நடைபெற்ற AIBDPA மாநில   மையக் கூட்டத்தின் முடிவுகள் :-

தோழர்களே    !!         

                       24.9.24 அன்று நமது AIBDPA சங்கத்தின் தமிழ்மாநில மையக் கூட்டம் (Online மூலமாக) நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் எஸ்.மோகன்தாஸ் அகில இந்திய துணை த்தலைவர், சி.கே. நரசிம்மன்  மாநில தலைவர், ஆர். ராஜசேகர் மாநில செயலாளர், எஸ். நடராஜா மாநில பொருளாளர், பி. மாணிக்கமூர்த்தி மாநில துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் :-

1). 12 & 13-11-2024 தேதிகளில் நடைபெற உள்ள டெல்லி பேரணிக்கு இதுவரை 108 தோழர்கள் பதிவு செய்து பயண ஏற்பாடு செய்து உள்ளனர்.

       டெல்லியில் இரண்டு நாட்களுக்கும் தங்கும் இடம் மத்திய சங்கம் ஏற்பாடு செய்ய உள்ளது.     

பயண செலவுக்கு மாநில சங்கத்தில் இருந்து நிதி உதவி குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டு தெரிவிக்கப்படும்.

2)  21-09-2024 அன்று திருச்சியில் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் நமது சங்கத்தின் ஏழாவது மாநில மாநாட்டுக்கான ஆரம்ப கட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சகோதர சங்கங்ளையும் இணைத்துக் கொண்டு இன்னும் கூடுதலான விரிவடைந்த வரவேற்புக்குழு விரைவில் அமைக்கப்படும். மாநில மாநாடு தயாரிப்பு குறித்த மாநில செயற்குழு விபரம் விரைவில் தெரிவிக்கப்படும்.

3) 28-09-2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள NCCPA தார்ணா போராட்டத்தில் நமது தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும் 

4) தொடர்ந்து நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்து ஏதாவது ஒரு வடிவில் ஆதரவு நடைவடிக்கையில் நமது சங்கத்தின் சார்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

5) பகுதி பணம் முறையாக அனுப்புதல்

          மாவட்டங்களில் வசூலிக்கப்படும் உறுப்பினர் சந்தா தொகை மற்றும் மெடிக்கல் நன்கொடைகள் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் மத்திய சங்கம், மாநில சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் அது முறையாக அனுப்பப்படவில்லை என்பது தெரிய வருகிறது. 

ஆகவே சந்தா பணத்தின் நிலுவை தொகையையும், மெடிக்கல் நன்கொடையின் பாக்கியையும் மாவட்ட சங்கங்கள்,  உடனடியாக மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும். 

மாநிலச் சங்கம் நிதி நெருக்கடியில் உள்ளது என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

எடுக்கப்பட்ட முடிவுகளைமு ழுமையாக முறையாக அமுல் படுத்துவோம் !!

தோழமையுடன்,
 ஆர்.ராஜசேகர் ,
மாநில செயலாளர்,
AIBDPA,
தமிழ் மாநிலம்.

25-09-2024

Post a Comment

0 Comments