Latest

10/recent/ticker-posts

AIBDPA சென்னை CGM (O) மாவட்ட செயற்குழு கூட்டம் - 26.09.24.

  AIBDPA சென்னை CGM (O) மாவட்ட செயற்குழு கூட்டம் - 26.09.24




தோழர், தோழியர்களுக்கு வணக்கம்!

        26.09.2024 அன்று நமது சங்க மாவட்ட செயற்குழு சென்னை CGM அலுவலக BSNLEU மாநிலச்சங்க அலுவலகத்தில் தோழர். எஸ். அன்புமணி DP தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டன்  தலைவர்களையும், நிர்வாகிகளையும் வரவேற்றதுடன் கூட்ட நிகழ்ச்சி நிரல்கள் பற்றி விளக்கிப் பேசினார்.

             மாநிலச்செயலர்  தோழர். R.ராஜசேகர் மாவட்ட செயற்குழுவைத் துவக்கி வைத்து, அகில இந்திய, மாநில சங்கங்களின் சிறப்பான செயல்பாடுகள், போராட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார். தோழர்கள். K.சீனிவாசன் DS & ACS BSNLEU மற்றும் ஆரோக்கியநாதன் DS, நீலகிரி ஆகியோர் செயற்குழுவை வாழ்த்திப்பேசினர். மாநிலத்தலைவர்தோழர். C.K.நரசிம்மன், மாவட்டசங்கம் மேலும் சிறப்பாக செயல்பட நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.

26.09.2024 அன்று நடைபெற்ற  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

1) 28.09.2024 காலை Flower Bazaar தொலைபேசி வளாகத்தில் நடைபெறும் NCCPAவின் "தர்ணா" போராட்டத்தில் உறுப்பினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது.

2) நவம்பர் 12 & 13 தேதிகளில் DELHIல் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொள்ள தோழர்கள் பெர்லின் கனகராஜ் & J.பாண்டுரங்கன் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாவட்ட சங்கம் முடிந்த உதவி செய்வது. (தோழர் அன்புமணி ரூ.500 வழங்கினார்.)

3) மாவட்ட மாநாட்டை  26.10.2024 அன்று கிரீம்ஸ் ரோடு BSNLEU மாநிலச் சங்க  அலுவலகத்தில் நடத்துவது. உறுப்பினர் அனைவரும் தலா ரூ.500 நன்கொடை வழங்குவது.

(தோழர்கள் CKN CP, RR CS, SA DP,TK DS, P.மகாலிங்கம் DOS ஆகியோர் தலா ரூ.1000மும், KVS DT, S.தங்கவேல் ADT மற்றும் வாசுதேவன் ஆகியோர் தலா ரூ.500ம் நன்கொடை வழங்கினர். தோழர்கள்.R.சிரில்ராஜ் ADS(ரூ.1000), பெர்லின் ADS(ரூ.1000) உட்பட வந்திருந்த அனைத்து தோழர்களும் நன்கொடை வழங்க உத்தரவாதமளித்தனர். தோழர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.)

4) மாவட்ட செயலர் & பொருளாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கை ஒரு நீக்கம் ஒரு சேர்க்கையோடும் & வரவு-செலவு கணக்கும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

28.09.2024 NCCPA "தர்ணா"வில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட மாநாட்டு நன்கொடை ரூ.500ஐ அனைவரும் வழங்கி மாநாட்டை வெற்றிகரமாக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அதற்கு மேலும் வழங்கலாம்.

தோழமையுடன்,
T.கோதண்டன், 

மாவட்டசெயலர்.

Post a Comment

0 Comments