NCCPA அகில இந்திய மாநாடு, 13-14 டிசம்பர், 2023 சென்னை. நிர்ணயிக்கப்பட்ட நிதியினை வழங்கட வேண்டுகிறேன்
தோழர்களே,
NCCPA அமைப்பின் அகில இந்திய மாநாடு 2023 டிசம்பர் மாதம் 13,14 தேதிகளில் சென்னை எழும்பூர் அருகில் வெப்பேரியில் உள்ள மகாராஷ்டிரா மண்டல் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்பு குழு உருவாக்கப்பட்டு நன்கொடை வசூலுக்கான சுற்றறிக்கையும், ரசீது புத்தகமும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி நன்கொடையை மாவட்டங்கள் வசூல் செய்து வருவதாக நமக்கு தகவல் கிடைக்கிறது. ஆனால் இதனை தூரித படுத்த வேண்டும்.
நமது மாநில சங்கத்திற்கான நிதி பங்களிப்பு (கோட்டா) இரண்டு லட்சம் ரூபாய். மண்டபம் பார்ப்பது, சமையலுக்கான ஏற்பாடுகள், தங்கும் இடம் இவையெல்லாம் பார்க்கப்பட்டு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் நாமும் நம்முடைய பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். ஆகவே நம்முடைய மாவட்ட சங்கங்கள் இதுவரை வசூலிக்கப்பட்ட பணத்தை 31.10.2023 க்குள் மாநில பொருளாளரிடம் அனுப்பி வைக்க வேண்டும்.
மீதம் உள்ள தொகையை வரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் வசூல் செய்து முடிக்க வேண்டும்.
நிதி வசூலை இழுத்துக் கொண்டே செல்ல முடியாது. அடுத்த கட்ட வேலைகளுக்கு நாம் செல்வதற்கு நிதி அவசியம் என்பதனை நாம் அனைவரும் உணர்வோம்.
0 Comments