Latest

10/recent/ticker-posts

மாநிலச் செயலர் தோழர் ராஜசேகர் சேலத்தில் AIBDPA தோழர்களோடு கலந்துரையாடல்

மாநிலச் செயலர் தோழர் ராஜசேகர் சேலத்தில் AIBDPA தோழர்களோடு கலந்துரையாடல்


தோழர்களே, வணக்கம்.

                 இன்று 28.9.2022 AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர்.R. ராஜசேகர் அவர்கள் சொந்த வேலை நிமித்தமாக சேலம் வந்திருந்த பொழுது இருந்த தோழர்களைக் கொண்டு கலந்துரையாடல் முறையில் கூட்டம் சேலம் BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.

               மாநில செயலர் அவர்கள் தற்போதய நிலைமைகள், மெடிகல் அலவன்சு, மெடிகல் பில் இவற்றில் நமது சாதனைகள், இயக்க செயல்பாடு ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். சேலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் மாவட்ட செயற்குழுவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் 5 கிளைச் செயலர்கள், 5 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் நன்றி.

தோழமையுள்ள

S. தமிழ்மணி DS AIBDPA

Post a Comment

0 Comments