நம்முடைய தொடர் போராட்டங்களின் விளைவாக மெடிக்கல் பில் பிரச்சனையில் ஒரு நல்ல முன்னேற்றம். பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம் 31.03.2022 வரையிலான மெடிக்கல் பில்லுக்கான பணத்தை பட்டுவாடா செய்துள்ளனர்.
இப்பிரச்சனையில் தொடர் இயக்கங்களுக்கு அறைகூவல் கொடுத்த நமது AIBDPA மத்திய சங்கத்திற்கும், சரியான நேரத்தில் பிரச்சினைகளில் தலையிட்ட கோயம்புத்தூர் எம்பி திரு பி. ஆர். நடராஜன் அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழர்களே ! இது குறித்து உடனடியாக மாநில செயலர் ராஜசேகர் மாநில தலைவர் தோழர் சி கே நரசிம்மன் மாநில பொருளாளர் தோழர் நடராஜா ஆகியோர் டிஜிஎம் பைனான்ஸ் திரு அரவாழி அவர்களை உடனடியாக சந்தித்து விவாதித்தோம்.
அவரும் இந்த தகவலை உறுதி செய்துவிட்டு மாவட்டங்களுக்கு ERP ல் அப்டேட் செய்வது சம்பந்தமாகவும் உடனடியாக பட்டுவாடா செய்வது சம்பந்தம்மாகவும் உறுதியளித்துள்ளார்.
எனவே நமது மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக இப் பிரச்சனையில் தலையிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ERP யில் அப்டேட் செய்வது மற்றும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக தாமதம் இன்றி மாநில சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
தோழர்களே, இந்த முன்னேற்றம் நம்முடைய மூன்று கட்ட போராட்டத்தின் வெற்றி என்பதனை அனைத்து ஓய்வுதியர் மத்தியிலும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இது நம்முடைய தலையாயப் பணி.
போராட்டங்கள் தோற்பதில்லை.
தோழமை வாழ்த்துக்களுடன். ஆர் ராஜசேகர் மாநிலச் செயலாளர் 30.8.22
OUR STRUGGLE HAS ITS DESIRED RESULT.
Dear Comrades,
CHQ is happy to state that our relentless struggles for the important issues, particularly the just concluded three phased struggle, has definitely made compulsions on the government and BSNL management. Two most burning issues are pension revision and timely payment of Medical benefits. On both these issues there have been positive developments.
Regarding pending medical bills, the Corporate office has allotted necessary fund to clear upto 31-03-2022.
We are also thankful to Com. P R Natarajan MP for his effective intervention in the Parliament.
Circle and District Secretaries are requested to contact the respective BSNL admission to ensure early payment to the BSNL pensioners.
0 Comments