Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட வள்ளியூர் கிளையின் பொதுக்கூட்டம்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிளையின் பொதுக்கூட்டம்.



                    நெல்லை மாவட்டம் AIBDPA வள்ளியூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 16-07-2022 சனிக்கிழமை அன்று கிளை அமைப்புச் செயலாளர் தோழியர். S. கலையரசி அவர்கள் இல்லத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். I.‌ ஜெபமணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

               முதலில் தியாகிகளுக்கு அஞ்சலி உரையை கிளைப் பொருளாளர் தோழர். M. ஞானப்பாக்கியராஜ் வாசித்தார். கிளைச் செயலர் தோழர். A. பிச்சுமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கிளைக் கூட்டத்தை துவக்கிவைத்து மாவட்ட செயலாளர் தோழர். S. முத்துசாமி துவக்க உரையாற்றினார்.

                  மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள் S.சங்கரநாராயணன், R. M. கிறிஸ்டோபர் மற்றும் பாளையங்கோட்டை கிளைச் செயலர் தோழர். P. சூசை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். BSNLEU சங்கத்தைச் சார்ந்த முன்னணித் தோழர் மைக்கேல் செல்லத்துரை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

          தலமட்டப் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்ததோடு பிரச்சனைகளின் தீர்விற்கு  மாநிலச் சங்கத்தின் உதவியுடன் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்டச் செயலாளர் உறுதி அளித்தார்.

             20.7.2022 அன்று நெல்லை GM அலுவலகத்தில் வைத்து நடைபெறும் தர்ணாவிற்கு அனைத்துத் தோழர்களையும் திரட்டி சக்திமிக்கதாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

        மேலும் 24-08-2022 டெல்லி பேரணிக்கு வள்ளியூர் கிளையின் சார்பாக தோழர் மைக்கேல் சிலுவை கலந்து கொள்வதற்காக அவருக்குப் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

              டெல்லி பேரணிக்கு நெல்லை மாவட்டச் சங்கத்திற்கு மாநிலச் சங்கத்தினால் நிர்ணயம் செய்யப்பட்ட 10 தோழர்களுக்கும் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

           கிளை அமைப்புச் செயலாளர் தோழியர் S. கலையரசி அவர்கள் இல்லத்தில் வைத்து கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததோடு மட்டுமல்லாது அனைவருக்கும் SKC கொடுத்து மகிழ்ந்தார். மாவட்டச் சங்கத்தின் சார்பிலும் கிளைச் சங்கத்தின் சார்பிலும் மற்றும் அனைவராலும் அவருக்கு மனதாரப் பாராட்டுதல் தெரிவிக்கப் பட்டது.

                    நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர் M. சூரியநாராயணன் அவர்கள் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments