07.09.2021 அன்று நடந்த Online அதாலத்தில் எடுக்கப்பட்ட பிரச்னைகள் !
தோழர்களுக்கு வணக்கம்.
07.09.2021 அன்று Online மூலம் அதாலத் (ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்) நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் N. குப்புசாமி கலந்து கொண்டார். அதன் முடிவுகள் வருமாறு:-
மதுரை :-
1. தோழர். A. பழனிவேல் SDE திண்டுக்கல் LPD மறுநிர்ணயம் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் :-
2. தோழர். K. சண்முகம் TT இரண்டாவது மனைவி P. பூமாரி பெயர் PPOவில் சேர்ப்பது – முதல் மனைவியின் குழந்தைகள் தகுதி பார்த்து முடிவு செய்யப்படும். தோழர். K. சண்முகம் காலத்திற்கு பின்பு முடிவு செய்யப்படும்.
3. தோழர். அனவரதன் TM இரண்டாவது மனைவி பெயர் PPOவில் சேர்ப்பது – மதுரை GM அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் வந்த பிறகு முடிவு செய்யப்படும்.
திருச்சி :-
4. தோழர். M. மல்லிகா JTO திருச்சி 6-4-1987 முதல் 4-7-1987 வரையிலான பயிற்சிகாலம் பணிக்காலத்தோடு சேர்ப்பது பற்றி திருச்சி GM அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் வந்த பிறகு முடிவு செய்யப்படும்.
5. தோழர். R. நடராஜன் போட்டோ, அவரது மனைவி போட்டோ, பிறந்தநாள், விலாசம் எல்லாம் சரி செய்து 18-08-2021 அன்று உத்தரவு போடப்பட்டுள்ளது. “சாம்பென் டேஷ்போர்டில்” சென்று உத்தரவு நகலை எடுத்துக் கொள்ளலாம். ஒரிஜனல் மாற்றம் செய்த உத்தரவு டெல்லியிலிருந்து வரவேண்டும்.
சேலம் :- 6. திருமதி. K. வெள்ளையம்மாள் W/o. Late. சக்கரவர்த்தி இராஜேந்திரன் குடும்ப ஓய்வூதியம் உத்தரவு போடப்பட்டுள்ளது.
7. திருமதி. M. பழனியம்மாள் W/o. Late. மாரிமுத்து குடும்ப ஓய்வூதியம் பற்றி 17-08-2021 அன்று சேலம் GM அலுவலகத்திற்கு கடிதம் போடப்பட்டுள்ளது.
8. திருமதி. E.ஜெயமணி W/o. Late. இளஞ்செழியன் TM குடும்ப ஓய்வூதியம் பற்றி 10-08-2021 அன்று சேலம் GM அலுவலகத்திற்கு கடிதம் போடப்பட்டுள்ளது.
9. தோழர். P. இராமசாமி இரண்டாவது மனைவி R. அக்கம்மாள் பெயர் PPOவில் சேர்ப்பது சம்பந்தமாக போட்டோ விபரங்கள் அனுப்பக்கோரி 02.09.2021 அன்று கடிதம் போடப்பட்டுள்ளது.
10. D. கல்யாணி D/o., தண்டபாணி TS குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக 18-11-2020 அன்று சேலம் GM அலுவலகத்திற்கு கடிதம் போடப்பட்டுள்ளது.
ஈரோடு :-
11. தோழர். D. குமரகுருபரன் AOS(P) LPD Rs.26980லிருந்து Rs.27790ஆக மாற்றப்பட்டு போடப்பட்டுள்ளது.
13. திருமதி. M. ராணி W/o. Late. மூர்த்தி குடும்ப ஓய்வூதிய பென்சனை CDAவிலிருந்து IDAவிற்கு மாற்றி தருதல் சம்பந்தமாக நாகர்கோவில் GMக்கு 18.08.2021 அன்று CCA சென்னை அலுவலகத்திலிருந்து மீண்டும் கடிதம் போடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக நாகர்கோவில் SSAவிலிருந்து ரிப்போர்ட் அனுப்பப்படவில்லை. விரைவில் இப்பிரச்சனையை தலைமை பொது மேலாளர் சென்னை மட்டத்தில் எடுக்க இருக்கிறோம்.
கடலூர் :-
14. தோழர். P. கோபாலகிருஷ்ணன் OS அவர்களின் LPD Rs.30630லிருந்து Rs.32500ஆக மாற்றி 24.08.2021 அன்று உத்தரவு போடப்பட்டுள்ளது.
15. தோழர். P. சொக்கலிங்கம் OS அவர்களின் LPD Rs. 25120லிருந்து Rs. 25380ஆக மாற்றுவது சம்பந்தமாக கடலூர் GMக்கு விளக்கம் கேட்டு கடிதம் போடப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் முடிவு செய்யப்படும்.
*பாண்டி*
16. தோழர். V. தேவக்குமார் S/o., late.V. விபூஷணன் V. பிரேமா ஆகியோர் பென்சன் உத்தரவு போடப்பட்டு வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வங்கியில் பென்சன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
*குன்னூர்*
17. திருமதி. இரங்கமாதி W/o., Late. K.K. பெல்லான் CSS ஊட்டி முதல் மனைவி குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக சில விளக்ககஙகள் கேட்டு கடிதம் 17-08-2021 அன்று CCA சென்னை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் முடிவு செய்யப்படும்.
*மதுரை*
18. திருமதி. D. பரிபூரணம் W/o., தேவப்பிரியம், டெலிகிராப் மேன் குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக 18-08-2021 அன்று மதுரை GM அலுவலகத்திற்கு கடிதம் போடப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் முடிவு செய்யப்படும்.
*திருச்சி*
19. திருமதி. செபாஸ்டின் இராஜாத்தி W/o., Late. R. பெரியசாமி குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக திருச்சி GM அலுவலகத்திற்கு 17-08-2021 அன்று கடிதம் போடப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் முடிவு செய்யப்படும்.
கோவை மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலர் தோழர். V. வெங்கட்ராமன் அதாலத்தில் கலந்து கொண்டார்.
1. தோழர். P. துரைச்சாமி SDE பென்சன் மறுநிர்ணய உத்தரவு போடப்பட்டுள்ளது.
2. தோழர். J. சுரேஷ் DE பென்சன் மறுநிர்ணயம் செய்ய கோவை GM அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் வந்தவுடன் முடிவு செய்யப்படும்.
3. திருமதி. மீனாட்சி குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக கோவை GM அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் வரவில்லை.
4. தோழர்கள். M. ராஜா AO, லில்லிபேபி AO பென்சன் மறுநிர்ணயம் சம்பந்தமாக சென்னை CGM அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் வந்தவுடன் முடிவு செய்யப்படும். மாநிலச் சங்கமும் ரிப்போர்ட் அனுப்புவது சம்பந்தமாக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. (தோழர். M. ராஜா AO தனிப்பட்ட முறையில் பிரச்சனையை கொடுத்திருந்தார்.)
தோழர்களே ! அதாலத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை விரைவில் தீர்க்க முயற்சி எடுத்து வருகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
தோழமையுடன் N. குப்புசாமி மாநிலச் செயலர் ஈரோடு 11-09-2021.
0 Comments