Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் !!

 AIBDPA-தூத்துக்குடி மாவட்டம்

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி  மாவட்ட செயற்குழு கூட்டம்






தோழர்களே ! வணக்கம்.

            தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் 15.10.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணி அளவில் தூத்துக்குடி  மாசிலாமணிபுரம் 3வது தெருவிலுள்ள PCV அரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர் T.சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று. 14 மாவட்ட நிர்வாகிகள் 5 கிளை நிர்வாகிகள் 1 சிறப்பு அழைப்பாளர் என 20 தோழர்கள் கலந்துகொண்டனர்.  

                 மாவட்ட உதவிச்செயலர் தோழர் K. சுப்பையா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வந்திருந்த அனைவரையும் மாவட்ட உதவி தலைவர் தோழர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.

           மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்து AIBDPA அகில இந்திய துணைத்தலைவர்  தோழர் S. மோகன்தாஸ் துவக்க  உரையாற்றினார். அவர்தம் உரையில் இன்றைய போராட்டங்களின் அவசியம், AIBDPA சங்க  செயல்பாடுகள், சாதனைகள், இன்றைய அரசியல் சூழல், நமக்கான அரசியல், உறுப்பினர் சந்திப்பின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

கூட்டத்தில் செயல்பாட்டு அறிக்கை வைக்கப்பட்டு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி விவாதங்களும் நடைபெற்றது.  

1.  மத்திய மாநில அளவிலான  பிரச்சனைகள்...போராட்டங்கள் விளைவுகள்

2.மாவட்ட அளவிலான பிரச்சனைகள்... தீர்வு

3. ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம்

4. உறுப்பினர் ஆண்டு நன்கொடை

5. கிளை சங்கங்கள்....செயல்பாடு.,கிளை மாநாடுகள்

6. நேபாள பேரிடர் நிதி

7. NCCPA - FCPA இயக்கங்கள் பற்றியும் பேசப்பட்டது. தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்டச் செயலர் தோழர் பெ. ராமர் பதிலளித்தபின் செயல்பாட்டு அறிக்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர்.தோழர் K.கணேசன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். 

தோழமையுடன் 
பெ.ராமர்
மாவட்டச் செயலர்

தூத்துக்குடி மாவட்டம்

Post a Comment

0 Comments