Latest

10/recent/ticker-posts

AIBDPA 18வது அமைப்பு தினத்தில் முப்பெரும் விழா - திருச்செங்கோடு கிளை மாநாடு

 AIBDPA 18வது அமைப்பு தினத்தில் முப்பெரும் விழா - திருச்செங்கோடு கிளை மாநாடு






             21.10.2026ல் AIBDPA வின் அமைப்பு தினம்,  மரக்கன்றுகள் வழங்குதல், BSNLEU TNTCWU இணைந்த கிளை மாநாடு என முப்பெரும் விழாவாக திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் வைத்து சேலம் மாவட்ட திருச்செங்கோடு கிளை மாநாடு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு AIBDPA கிளைத்தலைவர் தோழர். M. குமரேசன் SDE Retd, TNTCWU கிளைத் தலைவர் தோழர். K. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டு தலைமையேற்றனர்.

        தேசியக் கொடியை AIBDPA மாவட்ட உதவி தலைவர் தோழர். K. ராமசாமி SDE Retd அவர்கள் ஏற்றி வைத்தார். அதன்பின் AIBDPA கொடியை தோழர். K.R.சண்முகம் SDE Retd அவர்களும் TNTCWU கொடியை தோழியர். K. சம்பூர்ணம் அவர்களும் விண்ணதிரும்  கோஷங்களுக்கு இடையே ஏற்றி வைத்தனர். 

          கொடி ஏற்றங்களுக்குப் பிறகு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு  G.தங்கராஜ் AGM,  தோழர்கள் T.சுப்பிரமணியம் SDE Retd, C.P.சுந்தரம் SSS Retd, M. செங்கோடன் SDE Retd, A.ஆறுமுகம் SSS Retd,  S.சீனிவாசன் AIBDPA பொருளாளர், S.ஹரிஹரன் ACS BSNLEU, E.கோபால் ACS AIBDPA, S. அழகிரிசாமி CoS AIBDPA, M.சண்முகம் CoS BSNLEU, M.செல்வம் DS TNTCWU ஆகியோர் பூச்செடிகளையும், மரக்கன்றுகளையும் அனைவருக்கும் வழங்கினர்.

        பின்னர் தொடங்கிய இணைந்த மாநாட்டிற்கு தோழர் M.குமரேசன் அவர்களும், தோழர் K.ராதாகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்றனர்.  அஞ்சலி உரையை தோழர் K.செல்வராஜ் JE Retd அவர்கள் நிகழ்த்த,  கிளைச் செயலர்கள் தோழர் M.ராஜலிங்கம் AIBDPA, தோழர் V.குமார் TNTCWU வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர். 

                   முதலில் மாநாட்டினை திரு G.தங்கராஜ் AGM  அவர்கள் வாழ்த்தி பேசினார். பின்னர் BSNLEU வின் மாநில உதவிச் செயலரும்,  சேலம் மாவட்ட செயலருமான தோழர் S.ஹரிஹரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.  அவரைத் தொடர்ந்து AIBDPA மாநில அமைப்புச் செயலாளர் தோழர் S.அழகிரிசாமி அவர்களும், AIBDPA மாநில உதவி செயலாளர் தோழர் E.கோபால் அவர்களும், மாவட்ட செயலர்கள் தோழர் S.தமிழ்மணி AIBDPA, தோழர் M.செல்வம் TNTCWU ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

           ஆண்டறிக்கையும்,  தனித்தனியான வரவு செலவு கணக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக  ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வினை மாவட்ட செயலர்கள் நடத்திக் கொடுத்தனர். AIBDPA விற்கு தோழர்கள் M.குமரேசன்,  M.ராஜலிங்கம்,  S.சீனிவாசன் ஆகியோரும், TNTCWU விற்கு தோழர்கள் Dசுரேஷ், V.குமார்,  K.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முறையே தலைவர், செயலர்,  பொருளாளராக தேர்வு செய்யப்பட்டனர்

        புதிய நிர்வாகிகளை தோழர்கள் M.சண்முகம் CoS BSNLEU, B.சுதாகரன் DVP AIBDPA, P. தங்கராஜு DT AIBDPA, R.இளங்கோவன் DOS AIBDPA, S.ராமசாமி BS நாமக்கல், P. சண்முகம் BS எடப்பாடி, R.ரமேஷ் DT BSNLEU, P.சம்பத் BS மெய்யனூர்,  சீனிவாசராஜு BS GM(o) BSNLEU ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் தோழர் V.பரந்தாமன் அவர்கள் நன்றி கூற முப்பெரும் விழா நிறைவு பெற்றது.

வாழ்த்துக்களுடன் 

S. தமிழ்மணி DS AIBDPA சேலம்

Post a Comment

0 Comments