Latest

10/recent/ticker-posts

இணைய வழி தமிழ் மாநில மாவட்ட செயலர்கள் கூட்டம் - 09-09-2026

 AIBDPA TN

இணைய வழி மாவட்ட செயலர்கள் கூட்டம் - 09-09-2026  

தோழர்களே,

             09-09-2026 மாலை 06-00 மணிக்கு ஆன்லைன் மூலம் மாவட்ட செயலர்கள் கூட்டம் மாநில தலைவர் தோழர். C.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. 16 மாவட்ட செயலாளர்களும் 4 மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட 24 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 16 மாவட்ட செயலாளர்களும் விவாதத்தில் கலந்து கொண்டு ஆய்படு  பொருட்களை உள்ளடக்கி தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

 விரிவான விவாதத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் :-

➡️  ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை இன்னும் சிறப்பாக அக்டோபர் மாதம் வரை நடத்துவது.

➡️ மத்திய சங்க அறைகூவலின் படி நேபாளம் பேரிடர் நிதி வசூலித்து அனுப்புவது 

மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை...20,000/-

ஈரோடு......15,000/-

சேலம்...........10,000/-

வேலூர்.........10,000/-

மதுரை......      5,000/-

நாகர்கோவில்...5000/-

சென்னை...........5000/-

திருநெல்வேலி.5000/-

தூத்துக்குடி........5000/-

விருதுநகர்.........5000/-

திருச்சி.................5000/-

கடலூர்.................5000/-

புதுச்சேரி.............5000/-

குன்னூர்............5000/-

தர்மபுரி................5000/-

கும்பகோணம்...2000/-

தஞ்சாவூர்...........2000/-

காரைக்குடி.........2000/-

மொத்தம்........1,16,000/-

இம்மாதம் 15ம் தேதிக்குள் மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

➡️ NCCPA, FCPA இயக்கங்களை வெற்றிகரமாக நடத்துவது. 

1. மண்டல தர்ணாக்களில் அதிக அளவில் AIBDPA தோழர்களை பங்கேற்க செய்வது.

2. நவம்பர் 25 நடக்க இருக்கும் டெல்லி பேரணியில் மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட குறைந்த பட்சம் 30 பேர் கலந்து கொள்வது.

கோவை...4

ஈரோடு......2

சேலம்.........2

வேலூர்........2

மதுரை......    2

நாகர்கோவில்,

சென்னை 

திருநெல்வேலி

தூத்துக்குடி

விருதுநகர

திருச்சி

கடலூர்

குன்னூர்

புதுச்சேரி

தர்மபுரி

கும்பகோணம்

தஞ்சாவூர்

காரைக்குடி 

மாவட்டங்கள் தலா 1(ஒன்று) 

➡️ ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தோடு 

# உறுப்பினர் ஆண்டு சந்தா ரூ.200 வசூலித்தல், 

# ஓய்வூதியர் முழக்கம் பத்திரிகையின் சந்தா 1000 அதிகரித்தல், 

# உறுப்பினர் எண்ணிக்கை 15 சதம் அதிகரித்தல், 

# மாவட்ட செயற்குழு கூட்டங்கள் கூட்டுவது  உட்பட அனைத்து முடிவுகளையும் மாவட்டங்கள் அமுல்படுத்த வேண்டும். 

➡️ தோழர் மோகன்தாஸ் எழுதியுள்ள "*AIBDPA வரலாறு*" 1,000 பிரதிகள் அச்சடிப்பது, மாவட்டங்கள் மூலம் விற்பனை செய்வது. என முடிவு செய்ய ப் பட்டது.

தோழமையுடன் 
R ராஜசேகர் 
மாநில செயலாளர் 
10.9.26

Post a Comment

0 Comments