Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட வள்ளியூர் கிளையின் மூன்றாவது கிளை மாநாடு

 சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட வள்ளியூர் கிளையின் மூன்றாவது கிளை மாநாடு








வணக்கம் தோழர்களே...!!!

              திருநெல்வேலி மாவட்ட வள்ளியூர் கிளையின் மூன்றாவது கிளை மாநாடு 01-08-2026 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளை தலைவர் தோழர் I.ஜெபமணி தலைமை தாங்கினார். தோழர். ரா. ராமகனி விண்ணதிரும் கோஷங்களுடன் சங்க கொடியினை ஏற்றினார். கிளை உதவித் தலைவரும் மாவட்ட உதவி செயலருமான தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை அமைப்பு செயலரும், மாவட்ட அமைப்புச் செயலருமான தோழர். S. மைக்கேல் செல்லத்துரை  அஞ்சலி உரையாற்றினார். கிளைத்தலைவர். தோழர்.ஐ. ஜெபமணி தலைமையுரை நிகழ்த்தினார்.

        மாவட்டச் செயலர் தோழர். எஸ். முத்துசாமி மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். மாநில உதவி தலைவர் தோழர் எஸ் நடராஜா எழுச்சி மிகு சிறப்புரையாற்றினார். மாவட்ட சாலை போக்குவரத்து சங்க மாவட்ட உதவி தலைவர்  CITU தோழர். சு. செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தோழர். எஸ். சங்கரநாராயணன் மாவட்ட பொருளாளர், மாவட்ட உதவி தலைவர்கள் தோழர்கள். C. சுவாமி குருநாதன், S. தங்கசாமி, V. ராமநாதன், தென்காசி கிளை செயலாளர் தோழர். கே. கணேசன், தோழர். எஸ்.பி கணேசன் கிளைச் செயலர் அம்பாசமுத்திரம், தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை கிளைச் செயலர் சங்கரன்கோவில் தோழர் S.செல்லத்துரை கிளைச் செயலாளர் திருநெல்வேலி,தோழர் அய்யம்பிள்ளை கிளை தலைவர் திருநெல்வேலி, தோழர் வேலுச்சாமி கிளை அமைப்புச் செயலாளர் தென்காசி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

         மேலும் மாநில சங்க ஆலோசகர். தோழர். C.K.நரசிம்மன், மாவட்டத்தலைவர். தோழர். கனகமணி, சங்கரன்கோவில் கிளைத்தலைவர். தோழர். S.K.மாரியப்பன் ஆகியோர் மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்

             மறைந்த தோழர் A. அருணாச்சலம், ATT (RTD) அவர்களின் மனைவி திருமதி. சாந்தா அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்தமைக்கு நன்றி கூறும் பொருட்டு நாமக்கல்லில் இருந்து தனது மகள் ரம்யா உடன் வந்து நமது சங்கத்திற்கு நன்றி கூறினார்.

           கிளைச் செயலர் தோழர். அ. பிச்சுமணி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கிளை பொருளாளர் தோழர். M. ஞான பாக்கியராஜ் வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இரண்டும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு நான்கு தோழர்கள் பேசியது சிறப்பம்சம்.

தோழர்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட செயலர் தோழர்.எஸ். முத்துசாமி விளக்கம் அளித்தார்.

        மாநாட்டின் முக்கிய அம்சமாக நடைபெறக் கூடிய மாவட்ட மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.10,000/= (ரூபாய் பத்தாயிரம்  கிளை சார்பாக வழங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்தலை மாவட்ட செயலர் தோழர். S.முத்துசாமி நடத்தினார்.

கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோழர்கள் : 

தலைவர் : ரா.மெ.கிறிஸ்டோபர்

உதவி தலைவர் : ஐ. ஜெபமணி 

செயலாளர் : அ.பிச்சுமணி 

உதவி செயலாளர் : எம்.சூரிய நாராயணன் 

பொருளாளர் : எஸ் மைக்கேல் செல்லத்துரை 

உதவி பொருளாளர் : எம். ஞான பாக்கியராஜ் 

அமைப்புச் செயலாளர்கள், 

தோழர்கள்,

1.எஸ். சந்தானமுத்து 

2.ரா.ராமகனி

3.S.சம்பத்  

4.J .அந்தோணி சேசு ராஜன் 

5.செரின் பிரமிளா எட்வின்

6.எஸ்.கலையரசி 

7.A.பிரமு.

தோழர். மைக்கேல் சிலுவை தணிக்கையாளராக நியமனம் செய்யப்பட்டார்

14 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிறைவாக.... கிளை உதவி செயலாளர். தோழர்.சூரிய நாராயணன்  நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

மாநாட்டில் 7 பெண்கள் உள்பட சுமார் 40 தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
அ.பிச்சுமணி 
கிளைச் செயலாளர்,
வள்ளியூர் கிளை.
01-08-2026.

Post a Comment

0 Comments