AIBDPA TN
மாவட்டச் செயலர்கள் இணைய வழிக் கூட்ட முடிவுகள் - 12-07-2026
தோழர்களே,
நமது தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் மாவட்ட செயலர்கள் அவசரக் கூட்டம் 12-07-2026 அன்று காலை 11-00 மணிக்கு இணைய வழியில் நடைபெற்றது. மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள் என 25 தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை மாநில உதவித் தலைவர் தோழர் S.நடராஜா தலைமை ஏற்று நடத்தினார். மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் அனைவரையும் வரவேற்று ஆய்படு பொருளை முன்வைத்து விளக்கவுரை ஆற்றினார். கூட்டத்தில் விவாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள்.
🌟1. வருகின்ற ஜுலை 18, 19 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கின்ற NCCPA, FCPA மத்திய சங்க நிர்வாகிகள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. மற்றும் 18 ம் தேதி நடைபெறும் பொது அரங்கில் AIBDPA சார்பில் குறைந்த பட்சம் 40 தோழர்கள் கலந்து கொள்வது. தொலைவில் இருந்து வரும் தோழர்களுக்கான காலை நேர வசதிகளை மாநிலச் சங்கம் செய்து கொடுக்கும்.
🌟2. ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், ஆகிய கோரிக்கைகளுக்காக COC சார்பில் நடைபெறும் இயக்கங்களை சிறப்பாக செயல்படுத்துவது..
🌟3. a) 16-07-2026 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்....
b) ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர தர்ணாக்கள் நடத்தப்பட வேண்டும்.....
c) ஜுலை 27 ம் தேதி ட்விட்டர் புரோகிராம் நடத்த வேண்டும்....
d) 2026 ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கவிருக்கும் டெல்லி பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் குறைந்த பட்சம் 43 தோழர்கள் கலந்து கொள்வது. ( மாவட்ட வாரியாக எத்தனை நபர்கள் கலந்துகொள்வது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
🌟4. 29-07-2026 அன்று காலை 10-00 மணி முதல் 01-00 வரை கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழு பாராட்டு விழாவில் வரவேற்புக் குழு தோழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்வது.
அன்று பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை மாநிலச் செயற்குழு நடைபெறும்.
இணைய வழியில் நடைபெற்ற கூட்டத்தின் விவாதங்களில் 15 மாவட்ட செயலர்கள், மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
👉2026 ஆகஸ்ட் 7, டெல்லி பேரணியில் மாவட்ட வாரியாக கலந்துகொள்ள வேண்டிய AIBDPA தோழர்களின் எண்ணிக்கை....
கோவை....6
ஈரோடு........3
சேலம்..........3
வேலூர்........3
மதுரை..........3
திருநெல்வேலி....3
குன்னூர்.......2
சென்னை......2
நாகர்கோவில்....2
தூத்துக்குடி..........2
விருதுநகர்.............2
திருச்சி.....................2
தர்மபுரி...........2
கும்பகோணம்........2
கடலூர்.........,2
பாண்டிச்சேரி..........2
தஞ்சாவூர்.................1
காரைக்குடி......1
மொத்தம்.......43
👉இது குறைந்த பட்ச எண்ணிக்கை தான். அதிகமாகவும் தோழர்கள் கலந்து கொள்ளலாம்.
👉குறைந்த கால அவகாசத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் விவாதங்கள் மிகச் செழுமையாக இருந்தன.
✨10-07-2026 அன்று சேலத்தில் நடைபெற்ற அதாலத் கூட்டத்தில் தொழிற் சங்கங்கள் குறித்து நிர்வாக தரப்பில் கூறப்பட்ட விமர்சன ரீதியான கருத்துக்களை நமது சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட தோழர்கள் எதிர்கொண்ட விதம் வெகுவாகப் பாராட்டப் பட்டது.
மாநிலச் சங்கமும் இது குறித்து CCA நிர்வாகத்திற்குக் கடிதம் வாயிலாக கருத்து தெரிவிப்பது என முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இறுதியாக தோழர் M.மேகநாதன் மாநில துணைத் தலைவர் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
R. ராஜசேகர்
மாநில செயலாளர்
AIBDPA
தமிழ் நாடு மாநிலம்.
12.7.26
0 Comments