Latest

10/recent/ticker-posts

நினைவலைகளில் மூழ்க வைத்த BSNLEU வெள்ளிவிழா மாநாடு 👍

  AIBDPA TN

 நினைவலைகளில் மூழ்க வைத்த BSNLEU  வெள்ளிவிழா மாநாடு 👍






தோழர்களே,

                BSNL ஊழியர்கள் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாடு 24.6.26 செவ்வாய் அன்று மதுரை IMA அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. 

      AIBDPA சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மூத்த தோழருமான தோழர். S.மோகன்தாஸ் அவர்கள் சங்கக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் துவங்கியது.

            BSNLEU சங்க மாநிலச் செயலர் தோழர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். BSNLEU துணைப் பொதுச் செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள் விழாவினைத் துவக்கி வைத்தார். 

              BSNLEU சங்க பொதுச் செயலர் தோழர் அனிமேஷ்மித்ரா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன்றைய சூழலில் BSNLEU, AIBDPA, ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் இவை மூன்றும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் போராடினால்தான் நமது கோரிக்கைகளான ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், இவற்றை வெல்ல முடியும் என்று விளக்கினார். 

           அவரைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவித் தலைவர் தோழர். பி. அபிமன்யு அவர்கள் விரிவுரையாற்றினார். அவர் தனது உரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் துவங்குவதற்கு முன்பிருந்தே நமது தொழிற்சங்க வரலாறு துவங்கிவிட்டது என்றார். பிஎஸ்என்எல் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் ஊழியர்களை ஊழியர்களை வலுவான ஒற்றுமையை ஏற்படுத்தி நாம் சாதித்த சாதனைகளை விளக்கி பேசினார். வரும் காலங்களில் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புக் குழு இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிகழ்ந்த அவரது உரையில் பல மலரும் நினைவுகளை, போராட்ட வெற்றி வரலாறுகளை நம் சிந்தனையில் தொட்டு எழுப்பினார். 

        அவரைத் தொடர்ந்து தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னனித் தோழர். P. சம்பத் அவர்களும் AIBDPA மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் அவர்களும், TNTCWU மாநிலச் செயலர் தோழர். சையது இத்தரீஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

             பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு BSNLEU வின் வரலாற்றிற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மூத்த தோழர்கள் தமிழகமெங்கிலும் இருந்து அழைக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டனர். 

       அவர்களிடையே தோழர். S.மோகன்தாஸ், தீக்கதிர் ஆசிரியர் குழு  உறுப்பினர் தோழர். பத்ரி,  மாநிலச்  மகளிர் ஓய்வூதியர் குழு மாநில நிர்வாகி தோழர். இந்திரா, ஈரோடு தோழர். சின்னையன், கடலூர் தோழர். முத்துக்குமாரசாமி, கோவை தோழர். வெங்கட்ராமன், திருப்பூர் தோழர். சுப்பிரமணி, வேலூர் தோழர். ஞானசேகரன், சேலம் தோழர். கோபால்,  மதுரை தோழர். செல்வின் சத்தியராஜ், நாகர்கோவில் தோழர். பழனிச்சாமி ஆகியோர் தங்களது நினைவுரைகளை வழங்கினர். 

                தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து BSNLEU, AIBDPA, TNTCWU, சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் 60 பெண்கள் உட்பட 400 தோழர்கள் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்  மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

           நமது தொழிற்சங்கப் பாரம்பரியத்தை, வரலாற்றினை, போராட்ட விழுப்புண்களை நாம் மீள்பார்வை செய்துகொள்ளும் வாய்ப்பாக BSNLEUவின் வெள்ளிவிழா மாநாடு சிறப்பான மாநாடாக அமைந்தது.

தோழமையுள்ள 
R.ராஜசேகர்,
மாநில செயலர்
AIBDPA TN 
24.6.26

Post a Comment

0 Comments