சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட கணபதி கிளைக் கூட்டம்
தோழர்களே
23.6.26 அன்று தோழர் K.. சந்திரசேகரன் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் 26 தோழர்கள் கலந்து கொண்ட கணபதி கிளைக் கூட்டம் சிறப்பாக நடந்தது. அஞ்சலி நிகழ்ச்சி தோழர் சசி நடத்தினார். வரவேற்புரை கிளைச் செயலாளர் தோழர். சந்திரன் தனது கருத்துக்களை பதிவு செய்து அனைவரும் வரவேற்று உரையாற்றினார்.
கடந்த காலங்களில் கிளை பொருளாளராக இருந்த Com. ராஜு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து தோழர் ராஜு தனது கிளை பொருளாளர் வரவு செலவு கணக்கு முடித்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட தோழர் முத்து அவர்களிடம் வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார்.
கிளை தோழர்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூறினர். தோழர்கள். நிசார் அகமது CVP மற்றும் மாவட்ட உதவி பொருளாளர் தோழர் R.R. மணி வாழ்த்துரை வழங்கினர். DS/AGS தோழர். A.குடியரசு நமது மாவட்ட சங்க மாநில சங்க அகில இந்திய சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக. தோழர் முத்து கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்


0 Comments