Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - கருத்தாக்கமிக்க மேதின சிறப்புக் கருத்தரங்கம் - 9.5.26

 AIBDPA TN - கருத்தாக்கமிக்க  மேதின சிறப்புக் கருத்தரங்கம் - 9.5.26

தோழர்களே,

          AIBDPA தமிழ் மாநிலச்  சங்கத்தின் சார்பாக மேதின சிறப்புக் கருத்தரங்கம் இணைய வழியில் 9.5.26 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கி 5.15 மணி வரை நடைபெற்றது. 

             மாநிலத் தலைவர் தோழர் C ஞானசேகரன் தலைமை தாங்கினார்.  அகில இந்திய உதவிப்  பொதுச் செயலாளர் தோழர் A.குடியரசு வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச்  செயலர் தோழர் R. ராஜசேகர் அறிமுக உரையாற்றினார். 

           BSNL ஊழியர் சங்க அகில இந்திய உதவிப்  பொதுச் செயலாளர் தோழர் S செல்லப்பா அவர்களும், AIBDPA  அகில இந்திய உதவித்  தலைவர் தோழர் S மோகன்தாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

                  பின்னர் CITU சங்கத்தின் மாநில பொது  செயலாளர் தோழர் S.கண்ணன் அவர்கள் கருத்துச் செறிவு மிக்க சிறப்புரை ஆற்றினார். மே தினத்தின் வரலாறு பற்றி தனது உரையைத் துவக்கி, இன்றைய சூழலில் மே தினத்தின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். இன்றைய இளைஞர்களையும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களையும், அரசியல் நெறிப்படுத்த வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும், அதில் ஓய்வூதியர்களின் பங்கேற்பு பற்றியும் விளக்கினார். நொய்டா பிரச்சனையின் காரணிகள், அதில் அனைத்து தொழிற் சங்கத்தினரும்  ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் விவரித்தார். அவருடைய கருத்துரை அனைவரின் சிந்தனையைத்  தூண்டும் விதத்திலும், கருத்தை நிறைக்கும் விதத்திலும் சிறப்பாக அமைந்திருந்தது.  ஏறத்தாழ 60 நிமிடங்கள் தனது கருத்துரையை அவர் வழங்கினார்.

      இறுதியில் மாநிலப்  பொருளாளர் தோழர் A இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.  

        இணையவழிக் கருத்தரங்கில் AIBDPA  சங்க அகில இந்திய அமைப்புச் செயலாளர்கள் தோழர் N.குப்புசாமி, தோழியர் பெர்லின் கனகராஜ், மகளிர் ஓய்வூதியர் அமைப்பின் மாநில  ஒருங்கிணைப்பாளர்  தோழியர் இந்திரா,  மாநில சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.   உழைக்கும் வர்க்கத்தின் திருநாளாக விளங்கக்கூடிய மே தினத்தின் சிறப்பினைப் போற்றும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் பங்கு கொண்ட அனைத்துத்  தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

             இணைய வழி இணைப்பினை ஏற்பாடு செய்த Dialouge channel தோழர். லெனின் அவர்களுக்கு நன்றி. 

தோழமையுடன், 
R. இராஜசேகர், 
மாநிலச் செயலாளர்.
10.5.26

Post a Comment

0 Comments