BSNLEU - AIBDPA -TNTCWU - தமிழ் மாநிலம் - இணைய வழி இணைந்த மாநிலச் செயற்குழு- 17.3.26

தோழர்களே,

           BSNLEU, AIBDPA, TNTCWU மூன்று சங்கங்களின் இணைந்த மாநிலச் செயற்குழு முதன் இணைய வழியில் நடைபெற்றது. 

1) BSNLEU சங்க 25ஆம் ஆண்டு அமைப்பு தின வெள்ளிவிழாவினைக் 20.3.26 அன்று கொண்டாடுதல், 

2) 23.3.26 அன்று ஒருங்கிணைப்புக் குழு தர்ணா போராட்டம், 

3) 25.3.26 அன்று ஒப்பந்த ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஆகிய இயக்கங்கள் பற்றி விவாதிக்க நடந்த செயற்குழு இரவு 8 மணிக்கு துவங்கி, 9 மணி வரை நடைபெற்றது.

             AIBDPA மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் தலைமை வகித்தார். BSNLEU மாநிலச் செயலர் தோழர். B. மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். TNTCWU மாநிலச் செயலர் தோழர். M. சையத் இத்ரீஸ் செயற்குழுவின் ஆய்வு பொருளை விளக்கிப் பேசினார். 

           BSNLEU அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா  ஆய்வு பொருளின் மீது விளக்கமான, விரிவான உரை நிகழ்த்தினார். 

             AIBDPA  அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள். A.குடியரசு, N.குப்புசாமி, பெர்லின் கனகராஜ், TNTCWU அகில இந்திய உதவிச் செயலர் தோழர். A.பாபு ராதாகிருஷ்ணன்   மாநில தலைவர்கள் தோழர். மகேஸ்வரன், C.ஞானசேகரன், C.பழனிச்சாமி  ஆகியோருடன், மூன்று சங்களையும் சார்ந்த மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் உட்பட 62 பேர் கூட்டத்தில் பங்கு பெற்று சிறப்பித்தனர். 

      கூட்டத்தில் மூன்று இயக்கங்களையும் எழுச்சியுடன் தமிழகமெங்கும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக TNTCWU மாநிலத் தலைவர் தோழர். C. பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.

      இணைந்த,  ஒன்றுபட்ட புதிய களத்திற்கு அடித்தளமாய் இந்த மாநிலச் செயற்குழு அமைந்தது பாராட்டுதலுக்குரியது.

தோழமையுடன்,

BSNLEU -AIBDPA- TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு.