AIBDPA TN - NCCPA - தமிழ்நாடுஇணைப்புக்குழுவின் கூட்டம் - 02.02.2026 !
NCCPA மாநில இணைப்புக்குழுவின் கூட்டம் (2.2.2026)* காலை 11 மணியளவில் சென்னை பூக்கடை BSNLEU அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் P. மோகன் தலைமையில் நடைபெற்றது. மாநில கன்வீனர் தோழர் C.K. நரசிம்மன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் / நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்திற்கு பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன :-
1) NCCPA CHQ முடிவின்படி 12.2.2026 பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் மறியல் உள்ளிட்ட இயக்கங்களில் மாவட்ட அமைப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப பங்கேற்பது!
சென்னையில் அண்ணாசாலை தபால் அலுவலகம் அருகில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் சென்னை தோழர்கள் பங்கேற்பது !
2) இதுவரையில் நடைபெற்ற இயக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்திய NCCPA/FCPA மாவட்ட அமைப்புகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
3) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.2.2026 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை நடைபெறவுள்ள FCPA மாநில அளவிலான தார்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவது !
4) 27.2.2026 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள FCPA மாநில சிறப்பு மாநாட்டை மிக எழுச்சியுடன் நடத்துவது!
தார்ணா மற்றும் சிறப்பு மாநாட்டிற்கான செலவுகளை மறு மதிப்பீடு செய்து, அதற்கேற்றார் போல் FCPA மாநில உறுப்பு சங்கங்களுடன் கலந்தாலோசித்து மாநில சங்கங்களின் நிதி பங்கை இறுதிப்படுத்த வேண்டும் !
தோழர்களே !
எதிர்வரும் இயக்கங்கள் வரலாற்று சிறப்புமிக்கதாய் அமைந்திட அனைவரின் ஒத்துழைப்பைக் கோருகிறோம் !
மாநிலத் தலைவர்.
C. K. நரசிம்மன்
மாநில கன்வீனர்
NCCPA மாநில இணைப்புக் குழு
தமிழ்நாடு
0 Comments