Latest

10/recent/ticker-posts

வாழ்த்தி வணங்குகிறோம் நன்றிகள் பல...!!

வாழ்த்தி வணங்குகிறோம் நன்றிகள் பல...!!



 தோழர்களே..!!

     18.01.2026 தேதியுடன்  அற்புதமாக அனைவரும் பாராட்டும்படி  கோவையில் நடந்த முடிந்த அகில இந்திய மாநாடு முடிந்து 30 நாட்கள் கடந்துவிட்டது. ஆயினும் அதன் களப்பணிகளை இன்னும் அலைபேசி வழியாக அழைத்து பலரும் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றனர்.

             மாநாடு துவங்கும் போது மாநில சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் இலக்கை எப்படி அடைவது என்று பயந்த நிலையில் தோழர்களிடம் விண்ணப்பித்தோம். தோழர்கள் ரூபாய் 500 முதல் துவங்கி 5,000, 10,000, 50,000 மற்றும் 1,00,000 வரையிலும்  கொடுத்து  சமுதாயப் போராட்டத்திற்காக நடைபெறும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் என்று அள்ளி வழங்கிய அன்பு  தோழர்களுக்கு, எத்தனை முறை வாழ்த்துக்களும் நன்றிகளும்  கூறினாலும் அது மிகையாகாது.

     பணம் மட்டும் போதுமா இதோ எங்களது உழைப்பையும் தருகிறோம் என்று தன்னார்வத்தோடு கலந்து கொண்ட தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பு அபரிதமானது.

     மேலும் நமது கோவை மாவட்டம் அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்படுகிறது என்று ஐந்தாவது அகில இந்திய மாநாட்டில் சிறப்பு மாவட்ட செயலாளர் ஆக தேர்வு செய்து விருது வழங்கியது.   அதோடுமட்டுமல்ல; வந்திருந்த அனைத்து மாநிலங்களின் மாநிலச் செயலாளர்கள், சார்பாளர்கள்  அனைவரும் பிரமிக்கத்தக்க மாநாடு என பாராட்டி சென்ற விதம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.

        கோவை மாவட்டம் சங்கப் பணிகளில்  சிறந்த மாவட்டமாக தேர்வு செய்வதற்கு வழிகாட்டிய மாநில சங்கத்திற்கும், அனுபவங்களை கற்றுக் கொடுத்த மூத்த தலைவர்களுக்கும் கோவை மாவட்டத்தை முன்னிலை நிறுத்த உதவிகரமாக இருந்த கோவை மாவட்ட தோழர்களுக்கும் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களோடு நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

      அகில இந்திய மாநாட்டில்   உங்கள் மாவட்ட செயலாளர் அகில    இந்திய துணைபொதுச்செயலாளராக தேர்வு செய்ய உதவிகரமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்

.       எனது தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களையும் நன்றிதனையும்  இரு கரம் கூப்பி  தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments