Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு !!

  AIBDPA TN - மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு


1) AIBDPA 5வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட A Saga of Struggles and Achievements என்ற ஆங்கில புத்தகம், தோழர். V.A.N.நம்பூதிரி மற்றும் தோழர் K.G. ஜெயராஜ் அவர்கள் எழுதியது.

AIBDPA வரலாறு பற்றியது. விலை ரூபாய் 100. 

மாவட்ட சங்கங்கள் தங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும் என்பதனை தெரிவித்தால் அவை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். 

புத்தகம் கோயம்புத்தூரில் நம் கைவசம் தான் உள்ளது. 



2) அடுத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவுக்கு இணங்க மாவட்ட அளவிலான கருத்தரங்கங்கள் நடைபெற  உள்ளது. 

            ஊழியர்களின் ஊதிய உடன்பாடு, 4ஜி 5ஜி சேவைகள், நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் குறித்து நடைபெறும் கருத்தரங்கத்தில் AIBDPA தோழர்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும். 

              AIBDPA சார்பாக பேசுவதற்கான பேச்சாளர்கள் யார் என்பதனை மாவட்ட சங்கங்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.  

தோழமை வாழ்த்துக்களுடன் 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்.
30.12.25

Post a Comment

0 Comments