AIBDPA TN
புதிய அத்தியாயத்தின் துவக்கமாக, முடிவு பெற்ற ஐந்தாவது அகில இந்திய மாநாடு -17,18-12-2025.
தோழர்களே,
கோவை மாநகரில் நடைபெற்ற AIBDPA அகில இந்திய சங்கத்தின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு மிகவும் வெற்றிகரமாக18-12-25 மாலை 5 மணிக்கு முடிவுற்றது.
நான்கு மாத காலமாக நாம் தேனீக்களைப் போல உழைத்து இந்த மாநாட்டை மைல்கல் மாநாடாக நடத்தி முடித்திருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் கிளைகளில் துவங்கி மாநிலச் சங்கம் வரையிலும் அனைவருடைய பங்களிப்பும் மத்திய சங்கத்தின் ஒத்துழைப்பும் உதவிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ந்துள்ளது.
இந்த மாநாடு வெல்வதற்கு பொருள் உதவியும் உடல் உழைப்பும் ஆலோசனைகள் கொடுத்து வழிகாட்டிய அனைவருக்கும் குறிப்பாக மற்றும் சிறப்பானதாக செயல்பட்ட கோவை மாவட்ட தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புக் குழு சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
நிர்வாகிகளாக
🚩ஆலோசகர் : தோழர் V A N நம்பூதிரி அவர்களும்
🚩காப்பாளர்களாக :
1) தோழர் அனந்த்குமார் பட்டாச்சாரியா - மேற்குவங்கம்
2) தோழர் கே ஜி ஜெயராஜ் - கேரளா.
🚩தலைவர். தோழர் . M.R. தாஸ் அஸ்ஸாம்
🚩பொதுச் செயலாளர்: தோழர் . முரளிதரன் நாயர் கேரளா
🚩பொருளாளர் : தோழர். M.G.S.குரூப்
அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து
🚩துணைத் தலைவராக தோழர் S.மோகன்தாஸ் அவர்களும்
🚩துணை பொதுச் செயலாளராக தோழர் A.குடியரசு அவர்களும்
🚩அமைப்புச் செயலாளர்களாக
1) தோழியர் பெர்லின் கனகராஜ் மற்றும்
2) தோழர் என் குப்புசாமி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை நாம் அதிகரித்து இருக்கின்றோம்.
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அத்துணை நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும்🙏 பாராட்டுக்களும்💐
நிர்வாகிகளின் பணி சிறக்கட்டும். மீண்டும் அத்தனை தோழர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA TN.
19.12.25


0 Comments