Latest

10/recent/ticker-posts

தேசிய அளவிலான FCPA வின் போராட்ட செயல் திட்டம்.

  AIBDPA TN - சுற்றறிக்கை எண் 32/25,...dt.19.11.25

தேசிய அளவிலான FCPA வின் போராட்ட செயல் திட்டம்.

              13.11.25  அன்று நடைபெற்ற FCPA வின் மத்திய அமைப்பின் இணைய வழிக்  கூட்டத்தில் அமைக்கப்பட்ட  நடவடிக்கை குழு, 19.11.25 அன்று கூடி பின்வரும் போராட்ட செயல்திட்டத்தை முடிவு செய்துள்ளது.

1) எல்லா மாநிலங்களிலும், அவற்றில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் FCPA அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும்.

2)  சர்வதேச தொழிற்சங்கம் TUI (P&R) மற்றும் WFTU, இவற்றிற்கு போராட்ட செயல் திட்டங்களை பற்றி, TUI துணைச் செயலாளர் கே ஜி ஜெயராஜ் அவர்கள் கடிதம் எழுதுவார். 

3) JCM staff side  செயலருக்கு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகளை விளக்கி கோரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

அந்த கடிதத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் இடம்பெறும் 

a) ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வுதிகளுக்கான ஓய்வூதிய திருத்தம். 

b) ஓய்வூதியருக்கான ஓய்வூதிய மாற்றத்தை மறுக்கும் ஓய்வூதிய விதிகள் மறுசீராய்வை விலக்க வேண்டும்.

c) எட்டாவது ஊதியக்குழுவின் செயல் குறிப்பில் உள்ள "Unfunded cost of non contributed pension schems" என்ற தவறான குறிப்பு நீக்க வேண்டும்

 d) 30 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

e) 5.1.2024 முதல் 50 சத பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.

f) எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை  1.1.2026 முதல் முழு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

g) NPS, UPS இவற்றை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்பட வேண்டும்.

h) 18 மாத பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும்.

i) 65 வயதிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

j) Commutation பிடித்தத்திற்கான காலம் குறைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமருக்கு அனுப்ப வேண்டும். அதிலும் பலன் கிடைக்காவிட்டால் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கங்களையும் இணைத்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

4) ஓய்வூதிய விதிகளின் மறுசீராய்வு திட்டத்தின் அபாயத்தை அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு விளக்கி அவர்களின் ஆதரவை கோரி கடிதம் எழுதப்பட வேண்டும்.

5) நவம்பர் 20 முதல் 23 வரை FCPA வின் சார்பாக பிரதமர், நிதி அமைச்சர், கேபினட் செகரட்டரி, ஜேசிஎம் ஊழியர் தரப்பு செயலர், ஆகியோருக்கு ஓய்வூதிய விதிகளின் மறுசீராய்வு திட்டத்தை நீக்க கோரி கடிதம் எழுத வேண்டும்.

6) ஓய்வூதிய விதிகள் மறு சீராய்வு திட்டத்தின் ஆபத்துகளை விளக்கி எல்லா ஓய்வூதியர்களிடமிருந்தும் கையெழுத்து பெற்று கையெழுத்து இயக்கம், மின்னஞ்சல் இயக்கம், அஞ்சல் அட்டைகள் அனுப்பும் இயக்கம், கடிதம் அனுப்பும் இயக்கம், இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

 7) தேசிய ஓய்வூதியர் தினமான 17.12.25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் 

8)  9.1.26 அன்று அனைத்து மாவட்டங்களிலும் தர்ணாக்கள் நடத்தப்பட வேண்டும்  

9) FCPAவின் 14  உறுப்பினர்கள் குழு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இது குறித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டுகோள் வைக்கப்படும்.

10)  ஒவ்வொரு மாநில FCPA அமைப்பும் 2026 ஜனவரி மாதத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

 11) 20.1.26 முதல் 30.1.26 வரை அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

12)  பிப்ரவரி 1 முதல் 5 வரை அனைத்து மாநிலங்களிலும் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து கோரிக்கைகளை விளக்கி மாநில மட்ட கூட்டங்கள் நடத்தப்படும்.

13) 13.2.26 அன்று மாநில தலைநகரங்களில் மத்திய தொழிற்சங்க தலைவர்களை அழைத்து மாநில அளவிலான தர்ணா நடத்தப்படும்.

14) பிப்ரவரி 20 முதல் 28 வரை மாநில மாநாடுகள் மத்திய தொழிற்சங்க தலைவர்கள் அரசியல் தலைவர்கள் FCPA வின் சார்பாளர்கள் கொண்ட மாநில மாநாடு நடத்தப்படும்.

15) JCM ஊழியர் தரப்பு  அமைப்பு எந்த போராட்டத்தை அறிவித்தாலும் அதில் FCPA முழுமையாக பங்கேற்கும்.

16) அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய மார்ச் மாதம் முதல் வாரத்தில் FCPA வின் தேசிய அமைப்பு கூடும்.

(அறிக்கை வெளியீடு)

 (தோழர். கே ராகவேந்திரன் பொதுச்செயலாளர் NCCPA.)

தோழமையுள்ள 
R.ராஜசேகர்
மாநில செயலர்
19.11.25

Post a Comment

0 Comments