AIBDPA - திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் மாவட்ட சங்கங்கள் சார்பாக சிறப்பாக நடைபெற்ற திருநெல்வேலி கருத்தரங்கம்
வணக்கம் தோழர்களே...!!!
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்திய 5வது அகில இந்திய மாநாட்டு சிறப்பு கருத்தரங்கம் திருநெல்வேலியில் இன்று (22.11.2025) சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் தோழர்.M. கனகமணி (திருநெல்வேலி), தோழர். T.சுப்பிரமணியன் (தூத்துக்குடி), தோழர். G.செல்வராஜ் (விருதுநகர்) கூட்டு தலைமையில், அகில இந்திய உதவி பொருளாளர் தோழர். V. சீதாலட்சுமி, மாநில உதவி தலைவர் தோழர். S. நடராஜா, மாநில உதவி தலைவரும் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான தோழர். P.ராமர், BSNLEU மாவட்ட செயலர் தோழர். NSMAV மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
விருதுநகர் மாவட்ட செயலர் தோழர். K. புளுகாண்டி அஞ்சலி உரையாற்றினார். நாகர்கோவில் மாவட்ட சங்க தோழர். S.ராஜகோபால் வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில், "பென்சன் மாறுதல், பென்சன் சட்ட திருத்தம் 2025" என்ற தலைப்பில் நமது அகில இந்திய உதவி தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கருத்துரை வழங்கினார்.
.. "மதச்சார்பின்மையை காப்போம்; அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் இந்திய தொழிற்சங்க மையம் திருநெல்வேலி மாவட்ட உதவி தலைவர் தோழர். K. G. பாஸ்கரன் கருத்துரை வழங்கினார்.
கீழ்க்கண்ட இரண்டு தீர்மானங்கள் தோழர். K. புளுகாண்டி விருதுநகர் மாவட்டச் செயலர் முன்மொழிய மாநில உதவி தலைவர் தோழர். S.நடராஜா வழிமொழிய ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1) அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் மதச்சார்பின்மையை பாதுகாப்போம்.
2) பென்சன் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டியும்,பென்ஷன் மாறுதலுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
இறுதியில் திருநெல்வேலி மாவட்ட செயலர் தோழர் S. முத்துசாமி நன்றி கூறினார்.
கருத்தரங்கில் 150 தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு நான்கு மாவட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
S. முத்துசாமி -திருநெல்வேலி
P. ராமர் -தூத்துக்குடி
K. ஜார்ஜ் -நாகர்கோவில்
*K. புளுகாண்டி* -விருதுநகர்
மாவட்ட செயலர்கள்,
AIBDPA.
22-11-2025.








0 Comments