AIBDPA TN சுற்றறிக்கை எண் 30/25 ,..dt.25.10.25
Joint CCA திருமதி கௌதமி பாலா ஸ்ரீ அவர்களுடன் சந்திப்பு
தோழர்களே,
23.10.25 அன்று Joint CCA, திருமதி கௌதமி பாலா ஸ்ரீ அவர்களை மாநில சங்கத்தின் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். மாநில சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர்.ஆர்.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ஏ.ஆரோக்கியநாதன், தோழர்.R.சீனிவாச ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும், காணப்பட்ட தீர்வுகளும்
1) 21.10.25 அன்று நாம் கொடுத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது. கூடுதலாக,
30) திருச்சி ஏ முருகேசன் 78.2 மாற்றம் மற்றும்
31) தர்மபுரி செல்வி W/O ஜெயராமன் பணிக்கொடை வழங்குதல் ஆகிய இரண்டு பிரச்சனைகளும் சேர்த்து விவாதிக்கப்பட்டது.
மொத்தம் 31 தனி நபர் பிரச்சனைகளும், 17 நோஷனல் இன்கிரிமெண்ட் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக,
1) ராஜகுமாரி, வேலூர்
2) வனராஜா, வேலூர்
3) பத்மாவதி, கோவை
4) வளர்மதி, தர்மபுரி
5) நவநீதம், வேலூர்
6) சினேகலதா, STR,கோவை
7) செல்வி, தர்மபுரி ஆகிய பிரச்சனைகள் ஆழமாக விவாதிக்கப்பட்டன. இவைகளை விரைவில் பரிசீலித்து தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.
78.2 பிரச்சனைகள்
1) ஏ சாரதா, ஈரோடு
2) எம் ஆறுமுகம், திருச்சி
3) ஏ முருகேசன், திருச்சி
ஆகியவர்களின் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
குடும்ப ஓய்வூதிய மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை 15 நாட்களுக்குள் தீர்ப்பதாக உத்திரவாதம் கொடுத்துள்ளார்கள்.
1) தேன்மொழி, சேலம்
2) ஜோதி, சேலம்
3) மீனா, குன்னூர்
4) தாமரைச் செல்வன், சேலம்
5) அறிவழகன், தஞ்சை
ஆகியவர்களின் பிரச்சினைகளையும் விரைவாக பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
நோஷனல் இன்கிரிமெண்ட் தொடர்பாக
பல மாவட்டங்களில் இருந்து Fixation மற்றும் Speaking order முழுமையாக வரவில்லை என்று தெரிவித்தார்கள்.
மாவட்ட நிர்வாகங்களோடு ஆன்லைன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளது என Joint CCA அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை, ஈரோடு, மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முன்னேற்றம் இருப்பினும், காலதாமதம் அதிகரித்துள்ளதை எடுத்துக் கூறியுள்ளோம். விரைவு படுத்துவதாக Joint CCA அவர்கள் உறுதி அளித்தார்.
ஆர் ராஜசேகர்,
மாநிலச் செயலாளர், AIBDPA தமிழ் மாநிலம்.
25.10.25
0 Comments