Latest

10/recent/ticker-posts

8வது ஊதிய குழு அமைக்கப்பட்டது - அரசின் சூழ்ச்சி அம்பலமானது !!

  AIBDPA TN 

 8வது ஊதிய குழு அமைக்கப்பட்டது - அரசின் சூழ்ச்சி அம்பலமானது !!

தோழர். V A N. நம்பூதிரி - ஆலோசகர் AIBDPA CHQ


கடுமையான தொழிலாளர் விரோத, ஓய்வூதியதாரர் விரோத பிற்போக்குத்தனமான விதிமுறைகளுடன் நியமிக்கப்பட்டுள்ள, 8வது மத்திய ஊதியக் குழு.

        கடுமையான தாமதத்திற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கான 8வது ஊதியக் குழு அக்டோபர் 28, 2025 அன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், ஸ்ரீ பங்கஜ் ஜெயின் (பெட்ரோலியம் செயலாளர்) உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

                      மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கங்கள், சிவில் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிணைக்கப்பட்டு, அதன் ஒன்றுபட்ட கோரிக்கைகள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகும் கூட, ஊதியக் குழுவை அமைக்க கடந்த 9 மாத காலமாக காலந்தாழ்த்தி வந்தது ஒன்றிய அரசு. அக்டோபர் 10, 2025 அன்று FCPAயின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி உள்ளிட்ட கடும் போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியின்றி ஊதியக்குழுவை உடனடியாக உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

                     இருப்பினும், ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளை ஆய்வு செய்தால், அவை அனைத்தும் தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின்  கோரிக்கைகள், மற்றும் அவர்களின் தற்போதைய நலன்களுக்கும் முற்றிலும் எதிரானவையாக உள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைகள், நிதி நிர்வாகத்தின் தேவை, வளர்ச்சிக்கு போதுமான வளங்களை உறுதி செய்ய வேண்டிய அவசியம், நிதியளிக்கப்படாத,  பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தின் செலவுகள் மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீதான தாக்கம்,  ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் விரோத மற்றும் ஓய்வூதியர் விரோதக் குறிப்புகள் இதைவிட வேறு எதுவும்இருக்க முடியாது. தடைசெய்யப்பட்ட வழிமுறைகளால் நிரம்பிய இதுபோன்ற விதிமுறைகளை ஒருபோதும் நாம் கண்டதில்லை.

                     இதற்கு மேலும் ஊதியக் குழுக்கள் அமைக்கப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில்,  டெல்லி யூனியன் பிரதேச தேர்தல்கள் காரணமாக ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது. ஏனெனில் அங்கு அதிக எண்ணிக்கையிலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் வாக்காளர்களாக உள்ளனர். பீகாரில் நடைபெற உள்ள தேர்தல், மற்றும் ஊழியர்கள், ஓய்வூதியர்களின் தொடர்ச்சியான வீறுகொண்ட போராட்டங்கள் காரணமாக ஆணையத்தை நியமிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஆளும் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், வழிகாட்டு விதிமுறைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும்,  விரோதமாக உள்ளன.

        15வது சர்வதேச தொழிலாளர் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, வாழ்க்கைச் செலவுக் குறியீட்டுப் புள்ளிகளின் பட்டியல் பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை, பிரதமர் அவ்வப்போது பெருமை பேசும் உலகின் 4வது பெரிய பொருளாதாரம் பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களின் மிகப்பெரிய வருமானம், கொள்ளை லாபம் பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை, ரயில்வே, பாதுகாப்புத் துறை, மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கடும் ஊழியர் பற்றாக்குறையால் அவற்றில் பணி புரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அனுபவிக்கும் கடும் பணிச்சுமை பற்றியும், எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பங்களிப்பு அல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் ஆதாரமற்ற செலவு' என்பதுபழைய ஓய்வூதியத் திட்டத்தின் மீதான மறைமுகத் தாக்குதலாகும்.

அனைத்து ஓய்வூதியர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளான, ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதிய மறுசீராய்வு சட்டத்தை நம்மீது திணிப்பதற்கும், ஊதியக்குழு பரிந்துரைக்கும் சொற்ப சலுகைகளையும்  கூட மறுப்பதற்கான அபாய அறிகுறியாகும்.

                   பணியாளர்கள் தரப்பு, ஜேசிஎம், தேசிய கவுன்சில் ஆகியவற்றின் பரிந்துரைக் குறிப்புகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது தொழிலாளர்களை அவமதிப்பதுடன் ஜேசிஎம்மின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானது.

வழக்கமாக நியமிக்கப்படும் ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்களுக்குப் பதிலாக, ஆணையம் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  இது ஊதியக்குழுவின் அதிகார வரம்பையும், ஆரோக்யமான விவாதங்களையும் கட்டுப்படுத்துகிறது. ஊதியக்குழுவிற்கு குறைவான முக்கியத்துவத்தையே அரசு கொடுத்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.

இந்த மோசகரமான ஊதியக் குழுவின் அமைப்பிற்கு எதிராக நமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் வலுவான ஆர்ப்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி நாம் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டியது அவரசத் தேவையாகும்.  ஓய்வூதியர்களை புறக்கணிக்க முடியாது என்பதையும், அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற கடைசி வரை உறுதியாகப் போராடுவார்கள் என்பதையும் இந்த அரசாங்கத்திற்குப் புரிய வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நமது கோரிக்கைகளை அடைவதற்கான போராட்டங்களுக்கு நாம் ஒற்றுமையாக நின்று போராடத் தயாராக இருப்போம்!!

வி.ஏ.என். நம்பூதிரி புரவலர் NCCPA / ஆலோசகர் AIBDPA 29.10.2025

Post a Comment

0 Comments