Latest

10/recent/ticker-posts

ஈரோடு மாவட்ட சங்க அமைப்பு தின கருத்தரங்கம் மற்றும் அகில இந்திய மாநாட்டு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி 22.10.25

 AIBDPA ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்ட சங்க அமைப்பு தின கருத்தரங்கம் மற்றும் அகில இந்திய  மாநாட்டு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி  22.10.25







            அன்புத் தோழர்களே !!

              சங்க அமைப்பு தினத்தை ஒட்டி  நமது AIBDPA  சங்க கொடியை நமது மாநில செயலாளர் தோழர். ஆர் ராஜசேகர் அவர்கள் டெலிபோன் பவனில் ஏற்றி வைத்தார்கள். பின்னர்  கருத்தரங்கம் கூடலிங்கம் திடல் அரசு ஊழியர் சங்க கட்டிடம் ஈரோட்டில் தோழர். சின்னசாமி மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை தோழர். எம். நடராஜன் மாவட்ட பொறுப்புச் செயலாளர்.

                 சிறப்புரை தோழர். ஆர். ராஜசேகர் மாநிலச் செயலாளர் அவர்கள் நமது அமைப்பும் பென்சனும் சம்பந்தமாக உரை நிகழ்த்தினார். தோழியர். M. கிரிஜா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இணைச் செயலாளர் AIIEA அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டமும் ஓய்வுதியர்  கடமைகளும் என்ற தலைப்பில் பேசினார்கள். தோழர். என். குப்புசாமி மாநில உதவி தலைவர் மற்றும் தோழர். L. பரமேஸ்வரன் மாநில துணைச் செயலாளர்  அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

         உடல் தானம் செய்த தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. தோழர். சி. பரமசிவம் மாவட்ட உதவி தலைவர், அவரது  துணைவியார் தோழியர். சரோஜா, தோழர். R. ராஜ் SDE (Rtd)West 2 கிளை மற்றும் தோழர். R. முருகேசன் AIPRPA ஆகியோர் உடல் தானம் செய்தமைக்காக பாரட்டப் பட்டனர்.

         நமது AIBDPA சங்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை  நடத்தியதன் விளைவாக இன்று நாம் பெறக்கூடிய மெடிக்கல் அலவன்ஸ் ஊதிய மாற்றம்  பிரச்சனை உள்ளிட்ட தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்ற வகையில்  மாற்று சங்கத்தின் தலைவர்கள் தோழர். A. பூசப்பன், தோழர். R. கணேசன் ஆகிய இருவரும் நமது சங்கத்தில் இணைந்து உள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களை அறிமுகப்படுத்தி புத்தகங்கள் வழங்க பட்டது.

                     மாநில செயலரிடம் அகில  இந்திய  மாநாடு நிதி முதல் தவணை ரூபாய் 2,50,000 வழங்கப்பட்டது. ஏற்கனவே 14  கிளைகள் அகில இந்திய மாநாடு  நிதி வழங்கிய நிலையில் மேலும்  நான்கு  கிளை செயலாளர்கள் நிதி வழங்கினார்கள். நிதி வசூல் செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தார். இறுதியாக மாவட்ட செயலாளர் V. மணியன் விடுப்பில் சென்ற நிலையில் பொறுப்பு செயலாளர் M. டராஜன் அவர்களிடமிருந்து மீண்டும் மாவட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் மாவட்ட பொறுப்பை சிறப்பாக செய்த தோழர். M. நடராஜன் அவர்களுக்கு நன்றி  தெரிவிக்கப்பட்டது.

                தோழர். ஜி. வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் நன்றி உரை நிகழ்த்தி கூட்டத்தை நிறைவு செய்தார். தொடர் மழைக்குமிடையில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் சங்க அமைப்பு தின கூட்டத்தில் பங்கேற்றனர். அத்துடன் BSNLEU மாவட்ட செயலர் ஊதிய உடன்பாட்டிற்காக இணைந்து போராடிய AIBDPA சங்கத்திற்கு  நன்றி தெரிவித்தார்.

கலந்து கொண்ட  அனைவருக்கும் நன்றி.

V. மணியன், 
மாவட்ட செயலாளர். ஈரோடு

Post a Comment

0 Comments