Latest

10/recent/ticker-posts

ஈரோடு மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம்

சிறப்பாக  நடைபெற்றஈரோடு மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம்







                  ஈரோடு மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம்  இன்று 08.09.2025 காலை ஈரோட்டில் வைத்து மாவட்ட தலைவர் தோழர். P. சின்னசாமி தலைமையில்  நடைபெற்றது.

                    கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள் மற்றும் அகில இந்திய  மாநாட்டு வரவேற்பு குழு  முடிவுகளை  விளக்கி  மாவட்ட பொறுப்பு செயலர் தோழர் M. நடராஜன் பேசினார். அடுத்ததாக  AIBDPA  அகில  இந்திய மாநாடு சிறப்பாக கோவையில் நடத்த நமது பங்களிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. விவாதத்தை துவைக்கி வைத்து  மாநில   துணை தலைவர் தோழர். N. குப்புசாமி மாநாட்டின் முக்கியத்துவம், அதற்கான நிதி கோட்டா என அனைத்தையும் எடுத்துரைத்தார்.

               அகில இந்திய மாநாட்டிற்காக ஈரோடு மாவட்டம் அளிக்கவேண்டிய பங்களிப்பு ரூபாய் நான்கு லட்சம் வசூல் செய்வது என்றும் அதற்கு கிளைகள் வாரியாக வசூல் செய்ய வேண்டிய  நிதி  விபரம் பற்றி மாவட்ட செயலர் தோழர். மணியன் விளக்கம் அளித்தார். மாநில துணை செயலர் தோழர். பரமேஸ்வரன் நிதி வசூலை சிறப்பாக செய்வது பற்றிய ஆலோசனைகளை  வழங்கினார்.

       விவாத்தில்  கலந்து கொண்ட  அனைத்து கிளைச்  செயலர்களும் கிளைகளுக்கு  ஒதுக்கப்பட்ட  நிதியை  வசூல் செய்து தருவதாக உறுதி அளித்தனர். மேலும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும்  கிளைச் செயலர்கள் ரூபாய் 2000/-, உறுப்பினர்கள் ரூ 1000 வழங்க வேண்டும்  என்று முடிவு  செய்யப்பட்டது.

செயற்குழுவிலேயே நிர்வாகிகள் தங்கள் நன்கொடைகளை  அறிவித்தனர். 23 தோழர்கள்  அங்கு அறிவித்த  நன்கொடை ரூபாய் ஒரு லட்சம். மிகவும் உற்சாகமாக நன்கொடை வழங்கிய  தோழர்களுக்கு  நன்றி.

அடுத்ததாக சிவில் ஓய்வூதியர்களின்  கூட்டமைப்பு (FCPA) சார்பில் நடைபெற்ற இயக்கங்கள் மற்றும் வேலைகள், அடுத்த  கட்ட  நடவடிக்கைகள்  பற்றியும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான பிரச்சனைகள் மற்றும் அதன்மீதான  நடவடிக்கைகள் பற்றி மாவட்ட  பொறுப்பு  செயலர் தோழர். M. நடராஜன் விளக்கமளித்தார்.

இறுதியில் மாவட்ட பொருளர் தோழர் வெங்கடேஷ்நன்றி கூறி நிறைவு செய்தார்.

 AIBDPA AIC க்கு நன்கொடை அறிவித்த தோழர்கள் விபரம் 

1 com     C  MANI       ₹10,000 

2 comN Kuppusamy  ₹5,000

3 comLParmeswaran₹5,000

4 com P Chinnasamy ₹5,000

5 com K Natarajan     ₹5,000

6 com M Natarajan    ₹5,000

7 com  V Maniyan       ₹5,000

8 com   Loganathan   ₹5,000

9 com L Palanisamy  ₹5,000

10 com G Vengades   ₹5,000

11com MohamRaffic ₹5,000

12 com S N Mylsamy ₹5,000

13 com Gunasekaran₹5,000

14 com S Ayyasamy  ₹5,000

15com Ramchandrn ₹4,000

16comPChelamuthu₹3,000

17com A Veerappan ₹3,000

18comSoundarrajan₹3,000

19comM Govindaraj ₹3,000

20 comR Kalimuthu ₹3,000

21comN Palanisamy₹3,000

22comKrishnamorthy3,000

                                     -----------

                Total Rs      1,00,000

                                    ========

கலந்து கொண்டு நன்கொடை வழங்கிய 

நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.


தோழமையுடன்

சின்னசாமி 
மாவட்ட தலைவர்.
நடராஜன் மாவட்ட
பொறுப்பு செயலர் 
வெங்கடேஷ் 
மாவட்ட பொருளர்.

Post a Comment

0 Comments