AIBDPA TN SIT IN PROTEST போராட்டம். கிரீம்ஸ் சாலை. 19.8.25
தோழர்களே,
.. BSNL தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக BSNL தமிழ் மாநில CGM திரு. S. பார்த்திபன் அவருடைய அதிகார வர்க்க போக்கை கண்டித்தும், தொழிற்சங்கங்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்க மறுக்கின்ற தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் 19.8.25 அன்று சென்னை கிரீம்ஸ் சாலை CGM அலுவலகத்தில் SIT IN PROTEST கண்டன இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை சக்தியான இயக்கமாக நடத்த வேண்டியது அனைவரின் தலையாய கடமை. அதனடிப்படையில் நமது AIBDPA தோழர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நம்முடைய முழுமையான சக்தியை திரட்டிட வேண்டும். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள AIBDPA தோழர்கள் பெருமளவு கலந்து கொள்வது இந்த இயக்கத்திற்கு வலு சேர்க்கும்.
தமிழ் மாநில CGM அவர்களின் அதிகார வர்க்க போக்கை எதிர்த்து தொழிற்சங்கங்களின் சக்தியைக் காட்டும் வகையில் இந்த இயக்கத்தை வலுப் பெறச் செய்வோம்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
15.8.25
0 Comments