AIBDPA TN
Jt.CCA திருமதி. கௌதமி பாலாஸ்ரீ அவர்களுடன் சந்திப்பு 14.8.25
தோழர்களே,
14 8 25 அன்று Jt.CCA. திருமதி. கௌதமி பாலஸ்ரீ அவர்களை நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநில ஆலோசகர் தோழர். C.K.நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர் R. ராஜசேகர் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் சந்தித்து பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.
நம்முடன் சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் தோழர் N.பஞ்சாட்சரம், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் தோழர் K. கோவிந்தராஜன் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
தோழர்களே,
இந்த விவாதம் நாம் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் பல்வேறு கடிதங்களும் இமெயில் இயக்கமும் நடத்தி ஒரு தல மட்ட போராட்டத்திற்கான சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்கள் நம்முடைய பிரச்சினைகள் விவாதிப்பதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்வதாக அறிவித்து இருந்தார்கள்.
ஆனால் Jt.CCA திருமதி கௌதமி அவர்கள் நீண்ட விடுப்பில் இருந்த காரணத்தினால் அது கூட்டம் தள்ளிப்போய் இருந்தது.
நாம் நம்முடைய கடிதங்கள் குறித்தும் நம்முடைய மாநில செயற்குழுவின் முடிவுகளையும் Jt.CCA விடம் மீண்டும் முன் வைத்திருக்கின்றோம்.
அவர்கள் அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக விவாதித்து ஒரு சுமுகமான தீர்வு காண்பதற்கும் வரக்கூடிய காலங்களில் பிரச்சனைகள் காலதாமதம் ஆகாமல் பார்த்துக் கொள்வதற்கும் உறுதியளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வரும் 20 8 25 அன்று மதியம் மற்ற பென்ஷன் பிரிவு அதிகாரிகளும் இணைந்து நமது பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றது.
அந்த கூட்டத்தில் நாம் நம்முடைய பிரச்சினைகளை முழுமையாக விவாதித்து தீர்வு காணுவதற்கு முயற்சிப்போம்.
மாநிலச் செயலாளர்
14.8.25.
0 Comments