Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - சுற்றறிக்கை எண் 27 / 25 ...dt.21.7.25

  AIBDPA TN   சுற்றறிக்கை எண் 27 / 25 ...dt.21.7.25


1) மாநில மைய கூட்டம் 
2) AIBDPA அகில இந்திய மாநாடு
3) மாநிலச் சங்க வங்கிக் கணக்குகள் - இடமாற்றம் !!
4) CCA அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கான போராட்டம்.

தோழர்களே,

நமது சங்கத்தின் மாநில மைய கூட்டம் 16.7.25 அன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் தோழர் C.ஞான சேகரன்,  மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர் A. இளங்கோவன்,  மாநில உதவி செயலாளர் தோழியர் பெர்லின் கனகராஜ், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள்.

1) ஓய்வூதியர் முழக்கம் சந்தா - 16.7.25 தேதி வரையில் 2,232 சந்தாக்கள் வந்துள்ளன. மாவட்ட வாரியாக பட்டியல் தரப்பட்டுள்ளது. 

இந்த சந்தா சேகரிப்பை நாம் ஜூலை இறுதிக்குள் முடித்தாக வேண்டும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நம்முடைய அகில இந்திய மாநாட்டு  பணிகளை துவங்க வேண்டும். ஆகவே மாவட்ட சங்கங்கள் உடனடியாக ஓய்வூதியர் முழக்கத்திற்கான சந்தா சேகரிப்பு இயக்கத்தை செய்து முடிக்க வேண்டுமென மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது. 

புதியதாக சேர்க்கப்பட்ட ஓய்வூதியர்கள் சந்தா முகவரியையும் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

 முகவரியில் திருத்தங்கள் இருந்தால் அதனையும் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இதுவரை 22 புத்தகங்கள் திரும்ப வந்துள்ளது. அவற்றையும் மாநில சங்கம் வாட்ஸ் அப்பில் வெளியிடும். அதற்கான சரியான முகவரியையும் தெரிவிக்க வேண்டும். 

ஓய்வூதியர் முழக்கத்திற்கான முகவரிகளை மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A. ஆரோக்கியநாதன் ( 9486816646) அவருடைய வாட்ஸ்அப் க்கு நேரடியாக அனுப்பிவிட வேண்டும்.

அவற்றை மாநிலச் சங்கம் முறைப்படுத்தும்.

16.7.25 வரை   மாவட்டங்கள் செலுத்திய சந்தா
            (சந்தா) (இலக்கு)(%)
கோவை-524  (800) 66%
ஈரோடு- 263. (450) 58%
வேலூர்-255 (400) 64%
சேலம்-201 (300) 67%
மதுரை-189. (200) 95%
விருதுநகர்-100. (175) 57% 
திருச்சி-141 (150) 94% 
நாகர்கோயில்-110 (150)73%
தூத்துக்குடி-115 (150) 77% 
திருநெல்வேலி-100 (150) 67%
தர்மபுரி-50 (110) 46%
கடலூர்-80 (100) 80%
சென்னை-20 (100) 20% 
கும்பகோணம்-67 (70) 96% 
பாண்டிச்சேரி-40 (80) 50% 
*குன்னூர்-70 (60) 117%* 
தஞ்சாவூர்-20 (30) 67% 
*காரைக்குடி- 26 (25) 104%*
*மொத்தம் -2371. (3500) 68%*
(21.7.2025 முடிய)

2) AIBDPA அகில இந்திய மாநாடு - டிசம்பர் 2025

தோழர்களே, 

நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிசம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடத்துவது என நாம் ஏற்கனவே முடிவெடுத்து உள்ளோம். அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் துவங்க இருக்கின்றன. கோயம்புத்தூர் தோழர்கள்  மண்டபம் பார்க்கும் பணியை துவங்க இருக்கிறார்கள். பொதுச் செயலாளர் BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு கோவை வருகின்ற பொழுது  மண்டபம் பார்த்துவிட்டு தேதிகள் இறுதிபடுத்தப்படும்.

3) சங்க வங்கிக் கணக்குகள்

மாநில சங்க வங்கிக் கணக்குகள்  தாம்பரம் SBI கிளையில் இருந்து கிரீம்ஸ் சாலை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

வங்கி கணக்கு எண் மாறாது. IFSC CODE மட்டும் மாறும். அது உங்களுக்கு அறிவிக்கப்படும். 

ஓய்வூதியர் முழக்கத்தின் சந்தா பணம் FIXED DEPOSIT ஆக மாற்றப்பட்டுள்ளது.

4) CCA அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கான போராட்டம்

E-mail  போராட்டம் 29-7-25 அன்று நடத்துவது என்றும் 

சென்னை Ethiraj salai ஆர்ப்பாட்டத்தை 7.8.25 அன்று நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. 

இதற்கிடையில் நிர்வாகம் நம்முடைய பிரச்சினைகள் குறித்து  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

(AIBDPA அகில இந்திய மாநாட்டு பணிகள்- கோவை)

தோழர்களே ,

அகில இந்திய மாநாட்டுக்கான மண்டபம் பார்க்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூரின் மைய தோழர்கள் 9 பேர்கள் இணைந்து ஆறு மண்டபங்களை 18.7.25 அன்று பார்த்திருக்கிறார்கள். 

அவற்றில் ஒரு சில மண்டபங்கள் shortlist படுத்தப்பட்டுள்ளது. 

பொதுச் செயலாளருடன் இணைந்து மண்டபமும் தேதியும் இறுதி படுத்தப்படும். 

அடுத்து, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வரவேற்பு குழு  கூட்டம் கோயம்புத்தூரில்  நடைபெறும். 

பின்னர் நமது மாநாட்டு பணிகள் துவங்கும். 

தோழமை வாழ்த்துக்களுடன், R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
21.7.25

Post a Comment

0 Comments