Latest

10/recent/ticker-posts

AIBDPA TN -சுற்றறிக்கை எண் 26/ 25....dt.27.6.25

 AIBDPA TN -சுற்றறிக்கை எண் 26/ 25....dt.27.6.25
1) 25.6.25 மொபைல்- FTTH  சேவைகளை மேம்படுத்த ஆர்ப்பாட்டம். 

2) GM (HR) ருடன் பேட்டி 

3) பென்சன் அதாலத் சென்னை 26.5.25.

தோழர்களே, 

1) தமிழகத்தில் மொபைல் சேவைகளில் உள்ள சீர்கேட்டை சரி செய்ய, FTTH சேவைகள் மேம்பட, CSC சேவைகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பதற்காக BSNLEU, AIBDPA  மற்றும் TNTCWU சங்கங்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் 

25 6 25 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. 

இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து  மாவட்ட செயலாளர்களுக்கும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் கிளை செயலாளர்களுக்கும் முன்னணி தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

2) GM (HR) உடன் பேட்டி 25.6.25 

GM (HR) திரு. துளசிராமன் அவர்களை மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில துணைத் தலைவர் தோழர் N.குப்புசாமி  மாநில அமைப்புச் செயலர் தோழர் ஆரோக்கியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினோம். 

நிர்வாக தரப்பில் திருமதி திவ்யா DGM HR,  திருமதி மல்லிகா முரளி AGM (W), திருமதி சுதா SDE( Admn) அவர்களும் உடன் இருந்தார்கள். 

விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் நிர்வாகத்தின் நிலைபாடும்.  

1) 2023, 2024 ஆண்டுகளில் நடைபெற்ற போல மெடிக்கல் அதாலத் மாவட்டங்களில் நடைபெற வேண்டும்.

2) திருச்சி மாவட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் ஆப்ஷன் மாற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

3) BSNL நிறுவனத்தில் நியமனம் ஆகி ஓய்வு பெறக்கூடிய SPS ஓய்வூதியர்களுக்கு அவர்களுடைய ஓய்வு ஊதியம் சலுகைகள் பெறுவதற்கான நிர்வாக ஏற்பாடு தேவை. 

4) அனைத்து CSC களிலும் DLC கொடுப்பதற்கான ஏற்பாடு வேண்டும். 

5)ஈரோடு மாவட்டத்தில் இலாகாவின் Conference hall சங்க கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். 

6) ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் இருக்கக்கூடிய தனிநபர் பிரச்சினைகள் 

# தோழர் செல்லமுத்து அவருடைய TSM சேவையை இணைத்து ஓய்வூதிய சலுகைகள் வழங்குவது, 

# கிரிஜா- கேசவன் இவரது கால தாமதமாக தரப்பட்ட மெடிக்கல் பில்,  

# R.முத்துராமலிங்கம்  கோவிட் காலத்து மெடிக்கல் பில். இவைகளுக்கு தீர்வு. 

7) நாகர்கோவில் தோழர் கிருபாகரன்  ஜான்ராஜ் மெடிக்கல் பில்,     

8) கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 AO க்களுக்கு   2004 முதல் 2019 வரை வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை.  

ஆகிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிர்வாகம் உறுதியளித்து உள்ளனர். 

3) பென்சன் அதாலத் 26.6.25 சென்னை. 

தோழர்களே, 

DOT பென்ஷன் அதாலத் 26.6.25 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிர்வாக தரப்பில் 

திரு.அவதேஷ் குமார் Pr.CCA ,  திருமதி.

இந்து மாதவி CCA , திருமதி கௌதமி பாலாசிங் Jt.CCA அவர்களும் திருமதி அருள்மதி Jt.CCA இவர்களுடன்  CCS அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். 

             நமது சங்கத்தின் சார்பாக மாநில ஆலோசகர் தோழர் C.K. நரசிம்மன் மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநிலச் சங்க நிர்வாகிகள்  தோழர் N.குப்புசாமி, தோழியர் பெர்லின் கனகராஜ்  தோழர் A.ஆரோக்கிய நாதன்,  தோழர் P. சரவணன், மாவட்ட செயலாளர்கள் தோழர் P.முருகன், தோழர் A.குடியரசு, தோழர் மதியழகன் ஆகியோருடன் தோழர் R.சீனிவாச ராகவன் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சென்னை தொலைபேசியில் இருந்து மாநில செயலாளர் தோழர் பஞ்சாட்சரம் CS, தோழர் கோவிந்தராஜ் AGS அவர்களும் கலந்து கொண்டார்கள். 

நம்முடைய தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த 102 பிரச்சினைகளில் பெரும்பான்மையான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

குடும்ப ஓய்வூதியம் 12 பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலாக FMA, PPO திருத்தங்கள், வங்கிக் கணக்கு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு உள்ளன. 7 Re-Authorisation, 2 dual பென்ஷன் பிரச்சினைகளும் பென்ஷனர் தரப்பில் நிலுவையில் உள்ளது. 

DLC காலதாமதமாக கொடுக்கப்பட்டதால் நிலுவையிலுள்ள பென்ஷன் அரியர்ஸ் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. 

விவாதத்திற்கு வந்த நமது 70 பிரச்சினைகளில் 45 பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கின்றன. 

மீதமுள்ள பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

இந்த கூட்டத்திற்கு CCA அலுவலக அதிகாரிகளுடன் CGM அலுவலக  அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து கணக்கு அதிகாரிகளும் நிர்வாக அதிகாரிகளும் ஆன்லைன் மூலமாக கலந்துகொண்டார்கள். 

 கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை முறைப்படுத்துவதிலும், அவற்றை சங்கங்களுக்கு நகல் கொடுப்பதிலும், சங்கங்கள் கொடுத்த பிரச்சினை, தனிநபர்கள் பிரச்சினை என்று பிரித்து வைப்பதில் நிர்வாகத் தரப்பில், குறைபாடுகளும் குளறுபடிகளும் இருந்தது.  

நிர்வாகத்தோடு நிறைய விவாதிக்க வேண்டி வந்தது. நாம் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்தோடு முறையாக விவாதித்தோம். 

நிர்வாகத்தோடு விவாதத்தில் AIBDPA சார்பாக கலந்துகொண்ட மாநிலச் சங்க நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர்களும் தங்களது மாவட்ட பிரச்சனைகளை முழுமையாக விவாதித்தார்கள். 

பல பிரச்சனைகளுக்கு குறிப்பாக குடும்ப ஓய்வூதியம் மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு  தீர்வு கண்டுள்ளோம். 

Authorisation வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 நாட்களுக்குள் பென்ஷன் பட்டுவாடா வழங்கப்படும் என்று AO ( PDA) திருமதி ஷெரின் பாத்திமா அவர்கள் கூட்டத்திலேயே உறுதியளித்து இருக்கிறார்கள். 

விவாத்துக்கு வராத, ஆறு மாதத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய பிரச்சனைகளை நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து தீர்ப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். 

வருங்காலத்திலும் பென்சன் அதாலத்துகளை அனைத்து மாவட்டங்களும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
27.6.25

Post a Comment

0 Comments