Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநில மைய கூட்ட முடிவு 21.6.25

 AIBDPA TN  மாநில மைய கூட்ட முடிவு 21.6.25*

         தமிழகத்தில் BSNLமொபைல் சேவையில் உள்ள குறைபாடுகளை களைய கோரி ஆர்ப்பாட்டம் 25.6.25

தோழர்களே, 

                தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்,  தமிழகத்தில் BSNL மொபைல் சேவையில் உள்ள குறைபாடுகளை களைய கோரி தமிழ்நாடு முழுவதும் 25.6.25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்திருக்கிறார்கள். 

கோரிக்கைகள்.

1) உயர்தரமான 4G சேவைகளும், குரல் அழைப்புகளும் (voice calls) உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். 

2)  தரமான FTTH சேவை தரப்பட வேண்டும்.

3) மாவட்டங்களில் CSC களை அவுட்சோர்சிங் கொடுக்கும் பொழுது சங்கங்களுடன் முறையாக விவாதிக்க வேண்டும். 

இவை எல்லாம் பொதுவான கோரிக்கைகள்.  

           ஆகவே,  நம்முடைய AIBDPA தமிழ் மாநில சங்கமும் இதில் கலந்து கொள்வதென இன்று (21.6.25) காலை கூடிய மைய கூட்டம் முடிவு எடுத்து இருக்கிறது. 

              அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நமது AIBDPA மாவட்ட சங்கங்கள் BSNLEU மாவட்ட சங்கத்துடன் இணைந்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

தோழமையுடன்,  R.ராஜசேகர், 
மாநிலச் செயலாளர். 
21.6.25

Post a Comment

0 Comments