மாநாடோ என வியக்கும் வகையில் ராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் மாவட்ட விரிவடைந்த செயற்குழு
17.5.2025 இன்று மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு ராசிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது. மாவட்ட தலைவர் தோழர் M. மதியழகன் தலைமை ஏற்றார். ராசிபுரம் கிளை செயலாளர் தோழர் P.M.ராஜேந்திரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். வரவேற்புரையாற்றிய தோழர் V. கோபால் மாவட்டத்தில் பென்ஷனர்களுக்கு உள்ள பிரச்னைகளையும் முன் வைத்தார்.
துவக்க உரையாற்றிய மாநில உதவிச் செயலாளர் தோழர் E.கோபால் அவர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத கொள்கைகளை விளக்கிப் பேசி, போராட்ட இயக்கங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் தனது சிறப்புரையில் சர்வதேச நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளை கூறினார். பென்சன் மாற்றம் மறுக்கின்ற நிதி மசோதா, பென்சன் மாற்றத்திற்கான AIBDPA வின் போராட்ட இயக்கங்கள், பென்ஷனர்களுக்கு மருத்துவ வசதி பெறுவதில் நமது அணுகுமுறை, மாநில சங்கம் CCA அலுவலகத்தில் பிரச்சினைகளை எடுப்பது, தீர்ப்பது, BSNL மெடிக்கல் பிரச்னையில் நிர்வாகத்தை சந்தித்து பேசியது, சொசைட்டி பிரச்சினை தீர்ப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள், சேலம் மாவட்ட குடும்ப ஓய்வுதியம், DLC கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியன பற்றி விளக்கமாக கூறினார்.
மாநில செயலாளர் அவர்களிடம் கிளைகளில் இருந்து பெறப்பட்ட ஓய்வூதியர் முழக்க சந்தாக்கள் 201க்கான தொகை ₹1,00,500/= வழங்கப்பட்டது. அந்த தொகை மாநில சங்க வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மாவட்ட செயற்குழுவினை வாழ்த்தி BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் S.ஹரிஹரன் அவர்கள் கருத்துரை வழங்கினார். அப்போது கோவையில் ஜூலை மாதம் நடைபெற உள்ள BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு AIBDPA தோழர்கள் கிளைகளில் நன்கொடை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தார். TNTCWU மாவட்டத் தலைவர் தோழர் K. ராஜன் அவர்கள் வாழ்த்துரையில் AIBDPA வினை சேலத்தில் வளர்த்தெடுக்க அனைத்து உதவிகளையும் செய்வோம் என தெரிவித்தார்.
AIBDPA மாநில அமைப்புச் செயலாளர் தோழர் S.அழகிரிசாமி அவர்கள் கருத்துரையில் இயக்கத்தை கொள்கை வழியில் வளர்த்தெடுக்க வலியுறுத்தினார். மாவட்ட செயலாளர் முன் வைத்த அறிக்கையின் மீது கிளைச்செயலாளர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். தொகுப்புரைக்குப் பின் கீழ்கண்டமுடிவுகள் எடுக்கப்பட்டது.
1) ஓய்வூதியர் முழக்க சந்தாக்கள் மேலும் 100 பெற்று மாநில கோட்டாவினை பூர்த்தி செய்வது. கிளைகள் ஒத்துழைப்பது.
2) ஓய்வூதியர் சந்திப்பு, புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது. 1000 இலக்கினை முடிப்பது
3) ஜூலை 9 பொதுவேலை நிறுத்தத்தின் போது AIBDPA தோழர்கள் மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து மறியல் உள்ளிட்ட இயக்கங்களில் பங்கேற்பது.
4) NCCPA போராட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது
தோழர் P. தங்கராஜு மாவட்ட பொருளாளர் அவர்கள் இது வரையிலான வரவு செலவு கணக்கினை முன் வைத்தார்.
இறுதியாக தோழியர் R.மணிமேகலை ராஜசேகரன் மாவட்ட துணைத் தலைவர் அவர்கள் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.
செயற்குழு முடிந்து, உணவிற்குப் பின் சேலம் Dr அகர்வால் கண் மருத்துவமனையின் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிறைய நமது தோழர்கள் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.
1) செயற்குழு,
2) ஓய்வூதியர்முழக்கம் சந்தா ஒப்படைப்பு,
3) கண் பரிசோதனை முகாம்
என முப்பெரும் விழாவாக நடந்திக் கொடுத்த ராசிபுரம் கிளைத் தோழர்களை மாவட்ட சங்கம் தோழமையுடன் பாராட்டுகிறது.
S. தமிழ்மணி மாவட்ட செயலாளர் சேலம்





0 Comments