Latest

10/recent/ticker-posts

AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

 AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 






தோழர்களுக்கு வணக்கம் !

             18. 5.2025 அன்று AIBDPA திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்   GM அலுவலக வளாகத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் I.ஜான் பாட்ஷா அவர்கள் செயற்குழுவை தலைமையேற்று நடத்தினார். மேற்கு கிளை செயலாளர்  D.ருக்குமாங்கதன் அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

        மாவட்டச் செயலாளர்  தோழர் K. சின்னையன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, மாவட்ட மாநாட்டிற்கான செயல்பாட்டு  அறிக்கையை  சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் L. அன்பழகன் அவர்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். இரண்டுக்கும் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. செயற்குழுவில் கலந்துகொண்ட தோழர்கள் அனைவரும் விவாதத்தில் பங்கு எடுத்தனர்.

 அதன் பிறகு  மாவட்ட மாநாடு வேலைகள் பற்றியும், மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில பொருளாளர்  தோழர். A.இளங்கோவன் அவர்கள் ஓய்வூதியர் முழக்கம்,லஆண்டு நன்கொடை, மாநில சங்க செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஓய்வூதியர் முழக்கம் 20 சந்தா வசூலிக்கப்பட்டது.

 இறுதியாக தோழர் L. அன்பழகன் அவர்கள் நன்றி கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார்.

 தோழமையுடன்  K.சின்னையன் மாவட்ட செயலாளர் *AIBDA திருச்சி.

Post a Comment

0 Comments